நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

LRT 3 இலகு ரயில் வழித்தடத்தில் தொழில்நுட்ப கோளாறு: யாருக்கும் காயம் ஏற்படவில்லை 

ஷா ஆலாம்- 

புதிதாக தொடங்கப்பட்ட LRT3 இலகு ரயில் வழித்தடத்தில் திடீரென்று தொழில்நுட்ப கோளாறு நிகழ்ந்தது. 

இந்த சம்பவம் ஷா ஆலாம் ஸ்டேடியம் LRT நிலையத்தில் நிகழ்ந்தது. மாலை 7.05 மணிக்கு சிறிய அளவில் வெடிப்பு சத்தம் கேட்டது என்று RAPID KL நிறுவனம் ஓர் அறிக்கையின் வாயிலாக தெரிவித்தது 

இருப்பினும், இந்த சம்பவத்தில் எந்தவொரு பயணிக்கும் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என்று அது கூறியது 

தொழில்நுட்ப கோளாறுக்கு ஆளான இலகு ரயில் உடனடியாக அதன் சேவையிலிருந்து பின் வாங்கிய நிலையில் அதில் பயணித்த பயணிகள் மாற்று இலகு ரயிலில் பயணம் செய்தனர். 

LRT 3 ரயிலின் சேவைகள் மீண்டும் வழக்க நிலைக்குத் திரும்பியது 

இலகு ரயிலில் பயணம் செய்யும் பயணிகளின் பாதுகாப்பு தான் தங்களின் தரப்பு பிரதானமாகும் என்று RAPID KL நிறுவனம் தெளிவுப்படுத்தியது 

LRT 3 வழித்தடத்தின் சேவையை பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கடந்த ஜூன் 28ஆம் தேதி தொடங்கி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset