செய்திகள் மலேசியா
நெகிரியில் லிங்கி சட்டமன்றத் தொகுதியில் அமினுடினும் சென்னாவில் அந்தோனி லோக்கும் போட்டியிடுகின்றனர்
கோலபிலா:
நெகிரி செம்பிலான் சட்டமன்றத் தேர்தலில் லிங்கி ம் தொகுதியில் அமினுடினும் சென்னாவில் அந்தோனி லோக்கும் போட்டியிடுகின்றனர்.
நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தலில் போட்டியிடும் 36 வேட்பாளர்களின் பட்டியலை நம்பிக்கை கூட்டணி நேற்று அறிவித்தது.
கோலபிலாவில் நடைபெற்ற ஒரு விழாவில், நம்பிக்கை கூட்டணி தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
இதன் மூலம் நெகிரி செம்பிலானின் இடைக்கால மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமினுடின் ஹருன் லிங்கி மாநிலத் தொகுதியிலும், ஜசெக பொதுச் செயலாளர் அந்தோனி லோக் சென்னா மாநிலத் தொகுதியிலும் போட்டியிடுகிறார்கள்.
மொத்தமுள்ள 36 தொகுதிகளில், நம்பிக்கை கூட்டணி 12 தொகுதிகளில் தற்போதைய உறுப்பினர்களைத் தக்கவைத்துக் கொள்ளும்,
அதேசமயம் தெமியாங், சிகாமட், அம்பாங்கன், மம்பாவ், சிரம்பான் ஜெயா மாநிலத் தொகுதிகளில் ஐந்து புதிய முகங்கள் போட்டியிடுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 15, 2026, 2:50 pm
நம்பிக்கை கூட்டணியின் ஒரேஒரு அமானா சட்டமன்ற உறுப்பினர் மலாக்கா முதலமைச்சருக்கு ஆதரவு
July 15, 2026, 2:48 pm
LRT 3 இலகு ரயில் வழித்தடத்தில் தொழில்நுட்ப கோளாறு: யாருக்கும் காயம் ஏற்படவில்லை
July 15, 2026, 10:21 am
