நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அரச நிறுவனங்களை தேர்தல் பிரச்சாரப் பொருளாகப் பயன்படுத்த வேண்டாம்: டத்தோஸ்ரீ அன்வார்

கோலபிலா:

நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தல் பிரச்சாரம் முழுவதும் அரச நிறுவனங்களை அரசியல் ஆதாயத்திற்காகப் பயன்படுத்த வேண்டாம்.

அனைத்துக் கட்சிகளையும், குறிப்பாகக் கட்சித் தலைவர்களையும் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இதனை  கேட்டுக் கொண்டுள்ளார்.

கூட்டரசு அரசியலமைப்பின் முக்கியத் தூண்களில் ஒன்றான அரசியலமைப்பு முடியாட்சி முறையை அனைத்துக் கட்சிகளும் மதிக்க வேண்டும்.

நெகிரி செம்பிலானின் யாங் டி-பெர்டுவான் பெசார், உண்டாங் யாங் எம்பாட் போன்ற அரசுப் பிரமுகர்களை அரசியல் சர்ச்சைகளில் இழுக்கக் கூடாது என்று பிரதமர் கூறினார்.

இந்த விவகாரம் ஒரு அரசியல் விளையாட்டுப் பொருளாக மாற்றப்படக்கூடாது என்பதற்காக நான் இதைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

நாம் அரச முறையை மதிக்க வேண்டும், ஏனெனில் அது நாட்டின் அரசியலமைப்பின் தூண்களில் ஒன்றாகும்.

நேற்று இரவு இங்குள்ள டத்தாரான் மெலாங்கில் நடைபெற்ற நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தலுக்கான நம்பிக்கை கூட்டணி வேட்பாளர் அறிவிப்பு விழாவில் ஆற்றிய தனது உரையில் அவர் இவ்வாறு கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset