செய்திகள் உலகம்
வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க தளங்களைத் தரைமட்டமாக்கி வருகிறது ஈரான் இராணுவம்
குவைத்:
அமெரிக்கா வரம்பு மீறி ஈரானில் தாக்க்ய்தல் நடத்தி வருவதால் வெகுண்டெழுந்த ஈரான் இராணுவம் அமெரிக்கத் தளங்களை குறி வைத்துத் தாக்கத் தொடங்கி உள்ளது.
மோதல் முற்றியுள்ளதையடுத்து குவைத்தில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது ஈரான் கடுமையான தாக்குதல் நடத்தியுள்ளது.
அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே நீடித்து வரும் நேரடிப் போர், தற்போது அண்டை நாடுகளுக்கும் பரவி புதிய உச்சத்தை எட்டியுள்ளது.
அமெரிக்காவின் தொடர் வான்வழித் தாக்குதல்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், ஈரான் கண்ணுக்கு கண் அதாவது ‘பழிக்குப்பழி’ வாங்கும் தனது ராணுவ நடவடிக்கையின் மூன்றாம் கட்டத்தைத் தொடங்கியுள்ளது.
ஈரான் தனது முதற்கட்ட நடவடிக்கையில் ஜோர்டானில் உள்ள பிரின்ஸ் ஹசன் விமானப்படை தளத்தைக் குறிவைத்து தாக்கியது. அங்குள்ள அமெரிக்காவின் பல ஆயுதக் கிடங்குகளும் எரிபொருள் நிலையங்களும் தீக்கிரையாக்கப்பட்டன.
2-ஆவது கட்டமாக, பஹ்ரைனில் உள்ள அமெரிக்க கடற்படை, விமானப்படைக்குச் சொந்தமான ஷேக் ஈசா ராணுவ தளம் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது.
அதன் தொடர்ச்சியாக தனது மூன்றாம் கட்ட தாக்குதலை குவைத்தில் நடத்தியது.
குறிப்பாக, குவைத்தில் உள்ள அமெரிக்காவின் முக்கிய ராணுவ தளங்கள் மீது ஈரான் நேற்று ஏவுகணைத் தாக்குதல்களை மேற்கொண்டது.
இது, உலகளாவிய பாதுகாப்பு, சர்வதேச கச்சா எண்ணெய் வர்த்தகத்துக்கு பெரும் அச்சுறுத்தலை உருவாக்கியுள்ளது.
குவைத்தில் உள்ள அலி அல்-சலேம் விமானப்படை தளத்தில் இருந்த அமெரிக்காவின் ஏவுகணை எதிர்ப்பு ‘பாட்ரியாட்’ (Patriot) பாதுகாப்பு அமைப்புகள், எரிபொருள் சேமிப்பு நிலையங்கள் முற்றிலும் அழிக்கப்பட்டதாக ஈரான் புரட்சிகர ராணுவ படை (ஐஆர்ஜிசி) அறிவித்துள்ளது.
மேலும், அஹ்மது அல்-ஜாபர் விமானப்படை தளத்தில் இருந்த அமெரிக்காவின் அதிநவீன எஃப்.பி.எஸ் ரேடார் அமைப்பும் இந்தத் தாக்குதலில் தரைமட்டமாக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்த தகவல்களை அனடோலு செய்தி நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
October 7, 2026, 10:48 am
பிரான்ஸ் நாட்டில் மாணவர்களின் போராட்டம் தீவிரமடைந்தது: 250,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
October 5, 2026, 5:28 pm
ரஷ்யாவில் மர்ம நுரையீரல் நோய்: 200 பேர் மருத்துவமனை கண்காணிப்பில் உள்ளனர்
October 4, 2026, 3:23 pm
பிரான்ஸ் அரசை உலுக்கும் மாணவர்கள் போராட்டம்: ஆசிரியர்களும் களத்தில் குதித்தனர்
October 2, 2026, 9:58 am
ஹௌதி போராட்டவாதிகள் சவுதி அரேபியாவின் மின்சார நிலையம் மீது தாக்குதல்: மதீனாவில் பரபரப்பு
October 2, 2026, 9:55 am
பிரேசில் உச்சநீதிமன்றம் வெளியே வெடிகுண்டுகள் இருப்பதாக சந்தேகம்: போலிஸ் விசாரணை
October 1, 2026, 5:32 pm
இந்தோனேசியா நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சராக அர்மநாத நாசிர் நியமனம்
September 30, 2026, 8:57 pm
நடுவானில் விமானிகள் சண்டை: கடத்தல் முயற்சியா என்று இஸ்ரேல் பிரதமர் நெத்தன்யாஹு அவசர ஆலோசனை
September 30, 2026, 8:46 pm
