செய்திகள் மலேசியா
ஆலோங்கிடம் நான் கடன்படவில்லை; எனக்கு எதிரிகளும் இல்லை: தாக்கப்பட்ட கால்பந்து விமர்சகர்
கோலாலம்பூர்:
நான் ஆலோங்கிடம் கடன்படவில்லை. அதே வேளையில் எனக்கு எதிரிகளும் இல்லை.
இருவரால் தாக்கப்பட்டதில் கண் குழியில் எலும்பு முறிவு ஏற்பட்ட பிறகு, யூ டியூபரும் கால்பந்து விமர்சகருமான அஸிசுர் ரஹ்மான் ஜக்காரியா இவ்வாறு கூறினார்.
கடந்த சனிக்கிழமை, இங்குள்ள பெட்டாலிங் ஜெயாவிற்கு அருகிலுள்ள பண்டார் ஸ்ரீ டாமன்சாராவில் உள்ள ஒரு பெட்ரோல் நிலையத்தில் தனது காரின் டயர்களில் காற்று நிரப்பிக் கொண்டிருந்தபோது, இந்தத் தாக்குதல் திடீரென நடந்து.
நான் என் காரில் காற்று நிரப்பிக் கொண்டிருந்தபோது, திடீரென இரண்டு பேர் வந்து என் தலையில் உதைத்து, என்னை இடைவிடாமல் தாக்கினர்.
பின்னர் ஒருவர் வந்து உதவ முயன்றார் என்று அவர் கூறினார்.
தாக்குதல் நடத்தியவர்களில் ஒருவர், அவர் திருடிவிட்டதாகக் குற்றம் சாட்டி ஒரு காணொளியைப் பதிவு செய்துவிட்டு அங்கிருந்து சென்றதாக அஸிசுர் ரஹ்மான் கூறினார்.
இவன் ஒரு திருடன், இவன் ஒரு திருடன்' என்று கூறினார். நான் என்ன திருடினேன்? என்று கேட்டேன்.
ஆனால் அவர்கள் தொடர்ந்து சென்றுகொண்டே இருந்தனர் என்று அவர் கூறினார்.
உள்ளூர் கால்பந்து குறித்த தனது கருத்துக்களுக்கும் இந்தத் தாக்குதலுக்கும் தொடர்பு இருக்குமோ என்று கேட்கப்பட்டபோது, தெளிவான நோக்கம் எதுவும் இல்லை.
மேலும் எந்தவொரு தனிநபர் மீதும் தனக்குச் சந்தேகம் இல்லை என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 26, 2026, 7:03 pm
நல்லாரைக் காண்பதுவும் நன்றே நலமிக்க நல்லார்சொல் கேட்பதுவும் நன்றே: டத்தோ ஸ்ரீ சரவணன்
July 26, 2026, 2:40 pm
