நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மாநில அரசிலிருந்து விலகுவதாக மலாக்கா ஜசெக அறிவிக்க உள்ளது

மலாக்கா:

மலாக்கா ஜசெக இன்று மாலை மாநில அரசிலிருந்து விலகுவதாகவும், தேசிய முன்னணி தலைமையிலான நிர்வாகத்தில் வகிக்கும் அனைத்துப் பதவிகளிலிருந்தும் ராஜினாமா செய்வதாகவும் அறிவிக்க உள்ளது.

நியமனம் செய்யப்பட்ட மாநில சட்டமன்ற உறுப்பினர்களை அறிமுகப்படுத்துவதற்கான முன்மொழியப்பட்ட அரசியலமைப்புத் திருத்தத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இன்று பிற்பகல் மாநில அரசு அரசியலமைப்புத் திருத்தத்தை முன்னெடுத்த பிறகு, மலாக்கா மாநில சட்டமன்றத்தில் ஜசெக பிரதிநிதிகள் இந்த அறிவிப்பை வெளியிடுவார்கள்.

மேலும் ஒரு மாநில ஆட்சிக் குழு உறுப்பினர், இரண்டு துணை செயற்குழு உறுப்பினர்கள், ஒரு துணை சபாநாயகர், அத்துடன் மாநில நிர்வாகத்தின் கீழ் நியமிக்கப்பட்ட அனைத்து கிராமத் தலைவர்கள், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் உட்பட அனைத்து அரசாங்கப் பதவிகளிலிருந்தும் ஜசெக விலகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset