செய்திகள் விளையாட்டு
உலகக் கிண்ணம்: நார்வேவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது இங்கிலாந்து
மியாமி:
உலகமே ஆவலுடன் உற்று நோக்கும் உலகக் கிண்ண கால்பந்து போட்டி விறுவிறுப்பான இறுதி கட்டத்தை நெருங்கிவிட்டது.
மியாமி நகரில் நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனும், தரவரிசையில் 4ஆவது இடத்தில் இருக்கும் இங்கிலாந்து அணியும், 31ஆவது இடம் வகிக்கும் நார்வேயும் மோதின.
முதல் பாதியின் 36ஆவது நிமிடத்தில் நார்வே வீரர் ஆண்ட்ரியாஸ் ஸ்ஜெல்டெருப் அடித்த கோலால் அந்த அணி முன்னிலை பெற்றது.
இதற்கு பதிலடியாக, முதல் பாதி கூடுதல் நேரத்தின் 2ஆவது நிமிடத்தில் ஜூட் பெல்லிங்ஹாம் கோல் அடித்து இங்கிலாந்தை சமநிலைக்கு கொண்டு வந்தார்.
இதையடுத்து 90 நிமிடங்கள் முடிவில் இரு அணிகளும் 1-1 என சமநிலையில் இருந்ததால் ஆட்டம் கூடுதல் நேரத்துக்கு சென்றது.
கூடுதல் நேரத்தின் 93ஆவது நிமிடத்தில், நார்வே கோல் காவலரின் தவறை பயன்படுத்திக் கொண்ட ஜூட் பெல்லிங்ஹாம் தனது 2ஆவது கோலையும் பதிவு செய்து இங்கிலாந்தை 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெறச் செய்தார்.
ஆட்டத்தை சமநிலைக்கு கொண்டு வர நார்வே வீரர்கள் கடுமையாக போராடினர்.
இறுதியில் 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி அரையிறுதிக்கு முன்னேறியது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
August 11, 2026, 12:58 pm
காற்பந்து கோல் அடித்த மகிழ்ச்சியில் பிரேசிலிய வீரர் சுரங்கப்பாதைக்குள் குதித்தார்
August 11, 2026, 9:36 am
பிபா தலைவருக்கு எதிராக முக்கியமான 3 கூட்டமைப்புகள் போர்க்கொடி
August 11, 2026, 9:33 am
சுக்மா விளையாட்டு போட்டடியில் 35 தங்கப் பதக்கங்களை வெல்ல பகாங் மாநிலம் இலக்கு
August 10, 2026, 11:17 am
என் வாழ்வின் முக்கிய நபர், என் தந்தை மறைந்து விட்டார்: மெஸ்சி உருக்கம்
August 10, 2026, 10:28 am
அனைத்துலக நட்புமுறை ஆட்டம்: செல்சி - ஜேடிதி சமநிலை
August 9, 2026, 1:15 pm
மெஸ்ஸியின் முதல் பயிற்சியாளரான அவரது தந்தை காலமானார்
August 9, 2026, 9:06 am
2026 ஆசியான் கிண்ண அரையிறுதி சுற்றில் ஹரிமாவ் மலாயா: பவித்திரன் அசத்தல்
August 8, 2026, 9:02 am
மரடோனாவின் இறுதிக் கட்ட வேதனையை சாட்சி வெளிப்படுத்துகிறார்
August 8, 2026, 8:59 am
