செய்திகள் மலேசியா
பேங்காக்கில் உள்ள பொழுதுபோக்கு மையத்தில் ஏற்பட்ட தீ; மலேசியர்கள் யாரும் பாதிக்கப்படவில்லை: விஸ்மா புத்ரா
புத்ராஜெயா:
தாய்லாந்தின் பேங்காக்கில் உள்ள ஒரு பொழுதுபோக்கு மையத்தில் ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் குறைந்தது 27 பேர் உயிரிழந்தனர்.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்களில் இதுவரை மலேசியர்கள் யாரும் இல்லை என விஸ்மா புத்ரா உறுதிப்படுத்தியுள்ளது.
மேலும், காயங்கள் காரணமாக 63 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களில் 22 பேர் தற்போது கவலைக்கிடமான நிலையில் உள்ளதாகவும் உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்தத் தீ விபத்து நேற்று நிகழ்ந்ததாகவும், இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து பாங்காக்கில் உள்ள மலேசியத் தூதரகம் நிலவரங்களை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும் விஸ்மா புத்ரா இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்த விபத்தில் மலேசியர்கள் யாரேனும் பாதிக்கப்பட்டுள்ளார்களா என்பதை உறுதி செய்வதற்காக, தூதரகம் சம்பந்தப்பட்ட உள்ளூர் அதிகாரிகளுடன் தீவிரமாகத் தொடர்பில் உள்ளது என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 13, 2026, 5:02 pm
நஜிப்பின் விடுதலைப் பிரச்சினையை எழுப்பத் தேவையில்லை: ங்காவை ஜாஹித் சாடினார்
July 13, 2026, 4:58 pm
திருத்தம் செய்யப்பட்ட MCMC சட்டம் மக்களவையில் தாக்கல்
July 13, 2026, 4:28 pm
காஜாங்கில் சாலை விபத்து: இளம் தொழில்நுட்ப வல்லுநர் பலி
July 13, 2026, 3:35 pm
'ஹஜ் பயணத்திற்கு முதலில் பதிவு செய்தவருக்கே முன்னுரிமை': துணை அமைச்சர் மர்ஹமா ரோஸ்லி
July 13, 2026, 1:11 pm
