நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தல்; பாஸ் கட்சியுடன் எந்த ஒத்துழைப்பும் இறுதி செய்யப்படவில்லை: ஜாஹித்

கோலாலம்பூர்:

நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தலை எதிர்கொள்வதற்காக, பாஸ் கட்சியுடன் தேசிய முன்னணி எந்த ஒத்துழைப்பையும் இறுதி செய்யவில்லை.

தேசிய முன்னணி தலைவர் டத்தோஸ்ரீ ஜாஹித் ஹமிடி இதனை கூறினார்.

ஆகஸ்ட் 1 தேர்தலுக்கு முன்னதாக, இரு கட்சிகளும் தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக பாஸ் தலைவர் டான்ஸ்ரீ ஹாடி அவாங் கூறியதற்குப் பதிலளிக்கும் விதமாக அவர் இவ்வாறு கூறினார்.

இதுவரை நடந்திருக்கக்கூடிய எந்தவொரு பேச்சுவார்த்தையும் ஒரு புரிந்துணர்வு மட்டுமே.

அது ஒரு இறுதி ஒப்பந்தம் அல்ல என்று அவர் கூறினார்.

ஒருவரால் கூறப்பட்டதை ஒரு துல்லியமான கூற்றாக ஏற்றுக்கொள்ளக்கூடாது.

ஏனெனில் எங்களுக்கும் பாஸ் கட்சிக்கும் இடையே எந்த ஒப்பந்தமும் இல்லை.
ஏதேனும் கலந்துரையாடல்கள் நடந்தால், அது வெறும் ‘புரிந்துணர்வு’ அல்லது ஒரு உடன்பாடு மட்டுமே என்று ஜாஹித் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset