செய்திகள் மலேசியா
பாஸ் கட்சி தேசிய முன்னணியுடன் அரசியல் ஒத்துழைப்பா? ம.இ.கா, ம.சீ.சவின் வாய் திறக்காதது ஏன்: அந்தோனி லோக் கேள்வி
பெட்டாலிங் ஜெயா-
நெகிரி செம்பிலான் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பாஸ் கட்சி தேசிய முன்னணியுடன் அரசியல் ஒத்துழைப்பை ஏற்படுத்துகிறது.
பாஸ் கட்சி தேசிய முன்னணியுடன் ஒத்துழைக்கும் நிலையில் தேசிய முன்னணியில் உள்ள ம.இ.கா, ம.சீ.ச கட்சிகளின் நிலைப்பாடுகள் என்னென்ன என்று ஜசெக கட்சியின் தலைமை செயலாளர் அந்தோனி லோக் கேள்வியெழுப்பினார்
நெகிரி செம்பிலான் ஜசெக தலைவராகவும் இருக்கும் அந்தோனி லோக், எதிர்வரும் சனிக்கிழமை தொடங்கும் நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தல் பிரச்சாரம் முழுவதும் எதிர்த்தரப்பினர் இனவெறிக் கருத்துக்களை முன்னிறுத்துவார்கள் என்பதால், தனது கட்சி கடுமையான சவாலை எதிர்கொள்ளும் என்று கூறினார்.
முன்னதாக, தேசிய முன்னணியுடன் பாஸ் கட்சி அரசியல் ஒத்துழைப்பு நல்கும் என்று பாஸ் கட்சியின் தேசிய தலைவர் டான்ஶ்ரீ அப்துல் ஹடி அவாங் இதற்கு முன் கூறியிருந்தார்.
நெகிரி செம்பிலான் மாநில தேர்தலில் மொத்தம் 36 இடங்கள் உள்ளன. கடந்த தேர்தலில் நம்பிக்கை கூட்டணி 36 இடங்களையும் தேசிய முன்னணி 14 இடங்களையும் தேசிய கூட்டணி 5 இடங்களையும் வெற்றிக்கொண்டது
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
July 13, 2026, 5:02 pm
நஜிப்பின் விடுதலைப் பிரச்சினையை எழுப்பத் தேவையில்லை: ங்காவை ஜாஹித் சாடினார்
July 13, 2026, 4:58 pm
திருத்தம் செய்யப்பட்ட MCMC சட்டம் மக்களவையில் தாக்கல்
July 13, 2026, 4:28 pm
காஜாங்கில் சாலை விபத்து: இளம் தொழில்நுட்ப வல்லுநர் பலி
July 13, 2026, 3:35 pm
'ஹஜ் பயணத்திற்கு முதலில் பதிவு செய்தவருக்கே முன்னுரிமை': துணை அமைச்சர் மர்ஹமா ரோஸ்லி
July 13, 2026, 1:11 pm
