நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நஜிப்பின் விடுதலைப் பிரச்சினையை எழுப்பத் தேவையில்லை: ங்காவை ஜாஹித் சாடினார்

கோலாலம்பூர்:

முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் ரசாக் விடுவிக்கப்பட்டால் பதவி விலகுவதாக ஜசெக அமைச்சர் ங்கா கோர் மிங் சூளுரைத்ததைத் தொடர்ந்து, ஒரு நியாயமான அறிக்கையை அவர் வெளியிட வேண்டும்.

துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ ஜாஹித் ஹமிடி இதனை வலியுறுத்தினார்.

தாங்கள் முன்பு போல் எதிர்க்கட்சியில் இல்லாமல், இப்போது ஒரு ஒற்றுமை அரசாங்கத்தில் இருப்பதால், இதுபோன்ற விஷயங்களை எழுப்பத் தேவையில்லை.

ஒவ்வொரு வாரமும் நாம் அமைச்சரவைக் கூட்டத்தில் சந்திப்பதால், அந்த அறிக்கை நியாயமானதாக இருக்கட்டும்.

நாம் எதிர்க்கட்சியில் இருந்திருந்தால், ஒருவேளை அந்த அறிக்கை ஒரு முறையான அறிக்கையாகக் கருதப்பட்டிருக்கலாம்.

ஆனால், நாம் அரசாங்கத்தில் ஒன்றாக இருக்கும்போது, ​​இதுபோன்ற விஷயங்களை எழுப்ப வேண்டிய அவசியமில்லை என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset