செய்திகள் மலேசியா
நெகிரி செம்பிலான் சட்டமன்ற தேர்தல்: நம்பிக்கை கூட்டணி வேட்பாளர்களை நாளை அறிவிக்கிறார் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம்
சிரம்பான் -
நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் நாளை, செவ்வாய்கிழமை நம்பிக்கை கூட்டணி சார்பாக போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களையும் நம்பிக்கை கூட்டணியின் தலைவரும் பிரதமருமான டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிமுகம் செய்கிறார்.
கோலா பிலாவில் உள்ள டத்தாரான் மெலாங் எனும் பகுதியில் நம்பிக்கை கூட்டணியின் வேட்பாளர்கள் அறிமுகம் செய்யப்படுவார்கள் என்று நம்பிக்கை கூட்டணி அதன் அதிகாரப்பூர்வ முகநூல் தளத்தில் குறிப்பிட்டது.
நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்ற தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் எதிர்வரும் 18ஆம் தேதி ஜூலை மாதம் 2026ஆம் ஆண்டு நடைபெறவுள்ளது
எதிர்வரும் ஆகஸ்ட் 1ஆம் தேதி நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது.
நம்பிக்கை கூட்டணி வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தில் நம்பிக்கை கூட்டணியின் துணைத் தலைவர்கள் டத்தோஶ்ரீ முஹம்மத் சாபு, அந்தோனி லோக், மற்றும் நெகிரி செம்பிலான் மாநில நம்பிக்கை கூட்டணி தலைவர் டத்தோஶ்ரீ அமினுடின் ஹருன் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.
நம்பிக்கை கூட்டணி சார்பாக பிகேஆர் கட்சி 16 இடங்களிலும் டி.ஏ.பி கட்சி 11 இடங்களிலும் அமானா நெகாரா கட்சி 9 இடங்களிலும் போட்டியிடுகின்றனர்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
July 13, 2026, 5:02 pm
நஜிப்பின் விடுதலைப் பிரச்சினையை எழுப்பத் தேவையில்லை: ங்காவை ஜாஹித் சாடினார்
July 13, 2026, 4:58 pm
திருத்தம் செய்யப்பட்ட MCMC சட்டம் மக்களவையில் தாக்கல்
July 13, 2026, 4:28 pm
காஜாங்கில் சாலை விபத்து: இளம் தொழில்நுட்ப வல்லுநர் பலி
July 13, 2026, 3:35 pm
'ஹஜ் பயணத்திற்கு முதலில் பதிவு செய்தவருக்கே முன்னுரிமை': துணை அமைச்சர் மர்ஹமா ரோஸ்லி
July 13, 2026, 1:11 pm
