நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அடையாளம் தெரியாத இருவரால் கால்பந்து விமர்சகர் கடுமையாகத் தாக்கப்பட்டார்

பெட்டாலிங்ஜெயா:

அடையாளம் தெரியாத இருவரால் கால்பந்து விமர்சகர் ஒருவர்  கடுமையாகத் தாக்கப்பட்டார்.

பெட்டாலிங் ஜெயா மாவட்ட போலிஸ் தலைவர் ஷம்சுடின் மாமாத் இதனை கூறினார்.

இந்த சம்பவம் கடந்த சனிக்கிழமை இங்குள்ள பண்டார் ஸ்ரீ டாமன்சாரா அருகே உள்ள ஒரு பெட்ரோல் நிலையத்தில் நிகழ்ந்தது.

அடையாளம் தெரியாத இருவரால் தாக்கப்பட்டதில் 40 வயது மதிக்கத்தக்க யூடியூப் கால்பந்து விமர்சகருமான அவருக்குக் கண் எலும்பு முறிவு உட்படப் பலத்த காயங்கள் ஏற்பட்டன.

இரவு 7.56 மணிக்கு இந்தச் சம்பவம் குறித்த தகவல் தமது துறைக்குக் கிடைத்ததாகக் கூறினார்.

தனது வாகனத்தின் டயரில் காற்று நிரப்பச் சென்ற பாதிக்கப்பட்டவரை, அடையாளம் தெரியாத பதிவு எண் கொண்ட யமாஹா எல்சி மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் அணுகியதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

சந்தேக நபர்கள், பாதிக்கப்பட்டவரைப் பலமுறை தாக்கியதோடு, அந்தச் சம்பவத்தை வீடியோவாகப் பதிவு செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

இந்தச் சம்பவத்தின் விளைவாக, பாதிக்கப்பட்டவருக்குக் கண் எலும்பு முறிவு,  பல பிற காயங்கள் ஏற்பட்டன என்று அவர் தெரிவித்தார்.

- பார்த்திபன் நாகராஜன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset