செய்திகள் மலேசியா
திருத்தம் செய்யப்பட்ட MCMC சட்டம் மக்களவையில் தாக்கல்
கோலாலம்பூர்:
நாட்டின் பாதுகாப்பைப் பேணுவதற்கான கூறுகளை உள்ளடக்கி அனைவருக்கும் பொதுவான சேவையை வழங்குவதற்கான கட்டமைப்பை வலுப்படுத்தும் நோக்கம் கொண்ட 2026-ஆம் ஆண்டு திருத்தம் செய்யப்பட்ட தொடர்பு மற்றும் பல்லூடக சட்ட மசோதா, இன்று மக்களவையில் முதல் வாசிப்பிற்காகத் தாக்கல் செய்யப்பட்டது.
அச்சட்ட மசோதாவை தாக்கல் செய்தபோது அதன் இரண்டாம் வாசிப்பு இக்கூட்டத் தொடரிலேயே செய்யப்படும் என்று தொடர்பு அமைச்சர் டத்தோ ஶ்ரீ ஃபஹ்மி ஃபட்சில் தெரிவித்தார்.
அச்சட்ட திருத்தம், சட்டம் 588 அல்லது 1998-ஆம் ஆண்டு தொடர்பு மற்றும் பல்லூடகச் சட்டம், செக்ஷன் 202-ஐ உள்ளடக்கியது.
இதனிடையே, உட்பிரிவு 2 உட்பிரிவு A-வில் புதிய துணை செக்ஷன்களான உட்பிரிவு 1A மற்றும் உட்பிரிவு 1B-ஐ இணைப்பதையும் அது நோக்கமாக கொண்டுள்ளது.
''முதல் வாசிப்பிற்கான சட்ட மசோதா, மாண்புமிகு தொடர்பு அமைச்சர் அவர்களால் சமர்ப்பிக்கப்பட்டது. 1998-ஆம் ஆண்டு தொடர்பு மற்றும் பல்லூடக சட்டத் திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இரண்டாம் வாசிப்பு எப்போது நடைபெறும்? இந்தக் கூட்டத் தொடரில் மாண்புமிகு மக்களவைத் தலைவர். எம்.சி.எம்.சி திருத்தம் செய்த சட்ட மசோதாவின் இரண்டாம் வாசிப்பு எப்போது நடைபெறும்? இந்தக் கூட்டத்தில் நடைபெறும்'', என்றார் அவர்.
- பெர்னாமா
தொடர்புடைய செய்திகள்
July 13, 2026, 5:32 pm
உணவகத்தில் குடுமிப்பிடி சண்டை: இரு இளம்பெண்கள் கைது
July 13, 2026, 5:28 pm
நெகிரி செம்பிலான் தேர்தல்: DAP மூன்று புதிய முகங்களை களமிறக்கவுள்ளது
July 13, 2026, 5:02 pm
நஜிப்பின் விடுதலைப் பிரச்சினையை எழுப்பத் தேவையில்லை: ங்காவை ஜாஹித் சாடினார்
July 13, 2026, 4:28 pm
காஜாங்கில் சாலை விபத்து: இளம் தொழில்நுட்ப வல்லுநர் பலி
July 13, 2026, 3:35 pm
