நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

காஜாங்கில் சாலை விபத்து: இளம் தொழில்நுட்ப வல்லுநர் பலி 

காஜாங்: 

காஜாங்கில் நிகழ்ந்த சாலை விபத்தில் 18 வயதான இளம் குளிரூட்டும் தொழில்நுட்ப வல்லுநர் பரிதாபமாக உயிரிழந்தார். 

இந்த சம்பவம் நேற்றிரவு லெபோ உத்தாமா பண்டார் துன் உசைன் ஓன் சாலையின் சமிக்ஞை விளக்கு சந்திப்பில் நிகழ்ந்தது 

 ஜாலான் சுவாடமாய் மற்றும் லெபு உத்தாமா பண்டார் துன் ஹுசைன் ஓன் சந்திப்பில் இரவு சுமார் 11.30 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்ததாகத் காஜாங் மாவட்ட போலிஸ் தரப்பு கூறியது. 

ஜாலான் சுவாடமாய் சாலையிலிருந்து வந்த ஒரு கார், எதிர் திசையில் வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதுவதற்கு முன்பு சந்திக்குள் நுழைந்தது.

மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டார், மேலும் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக செர்டாங் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது.

1987 சாலை போக்குவரத்து சட்டத்தின் செக்‌ஷன் 41(1)இன் கீழ் இந்த சம்பவம் விசாரணை செய்யப்படுகிறது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset