செய்திகள் மலேசியா
உண்மை என்பதால் துணிச்சலுடன் போராடினேன்; 6 ஆண்டுகள் என்பது மிகவும் நீண்டது: சைட் சாடிக்
புத்ராஜெயா:
தன்னை முழுமையாக விடுவித்த கூட்டரசு நீதிமன்றத்தின் தீர்ப்பை, நாட்டின் நீதித்துறை நிறுவனங்களின் சுதந்திரத்தையும் நீதியையும் பாதுகாக்க ஒரு முக்கியமான நினைவூட்டலாகும்.
மூவார் நாடாளுமன்ற உறுப்பினர் சைட் சாடிக் இதனை கூறினார்.
கடந்த ஆறு ஆண்டுகளாகத் தான் எதிர்கொண்ட இந்த வழக்கின் போக்கு, தன்னை மட்டுமல்லாமல், தனது பெற்றோர், குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் தனது அரசியல் பயணத்தையும் பாதித்துள்ளது.
கடந்த ஆறு ஆண்டுகளின் தொடக்கத்தை நான் திரும்பிப் பார்க்கும்போது நீதிமன்றத்திற்கு இழுத்துச் செல்லப்படுவதற்கு முன்பும், அது விசாரணைக் கட்டத்தில் இருந்தபோதும், நான் பயப்படவில்லை, குறுக்கு வழிகளைப் பின்பற்றவில்லை, சிறப்புச் சலுகைகளைக் கோரவில்லை.
ஏனென்றால் நான் சரியான பக்கத்தில் இருக்கிறேன் என்பது எனக்குத் தெரியும். நான் எந்தத் தவறும் செய்யவில்லை.
தைரியமாக இருப்பது உண்மை என்பதால் தைரியமாக இரு என்ற கொள்கையை நான் உறுதியாகப் பின்பற்றுகிறேன். அந்த நம்பிக்கையின் காரணமாகவே, இன்று நாம் இருக்கும் இந்த நிலைக்கு வந்துள்ளோம்
ஆறு ஆண்டுகள் என்பது மிக நீண்ட காலமாகும் என்று இங்குள்ள நீதிமன்றத்தில் செய்தியாளர்களிடம் அவர் இவ்வாறு கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 13, 2026, 5:02 pm
நஜிப்பின் விடுதலைப் பிரச்சினையை எழுப்பத் தேவையில்லை: ங்காவை ஜாஹித் சாடினார்
July 13, 2026, 4:58 pm
திருத்தம் செய்யப்பட்ட MCMC சட்டம் மக்களவையில் தாக்கல்
July 13, 2026, 4:28 pm
காஜாங்கில் சாலை விபத்து: இளம் தொழில்நுட்ப வல்லுநர் பலி
July 13, 2026, 3:35 pm
'ஹஜ் பயணத்திற்கு முதலில் பதிவு செய்தவருக்கே முன்னுரிமை': துணை அமைச்சர் மர்ஹமா ரோஸ்லி
July 13, 2026, 1:11 pm
