செய்திகள் மலேசியா
குடும்ப உறுப்பினர்களிடையே மோதல்: தாயின் வீட்டை எரித்த மகன் கைது
ஜித்ரா-
குடும்ப உறுப்பினர்களிடயே ஏற்பட்ட மோதல் காரணமாக தாயின் வீட்டை எரித்ததாக சந்தேகிக்கப்படும் ஓர் ஆடவரை போலிஸார் கைது செய்தனர்.
நேற்று மாலை 3.15 மணிக்கு நிகழ்ந்த இந்த சம்பவத்தில் தங்கள் தரப்புக்கு தகவல் கிடைக்கப்பெற்றதாக குபாங் பாசு மாவட்ட போலிஸ் தலைவர் சூப்ரிடென்டன் முஹம்மத் ரட்சி அப்துல் ரஹிம் கூறினார்.
சந்தேக நபர் வீட்டிலிரிந்து வெளியே வந்தவுடன் வீட்டில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது என்று அவர் தெரிவித்தார்.
புகார்தாரர் சந்தேக நபரின் உறவினர் ஆவார். மேலும், தீயில் எரிந்த வீடு, தற்போது போகோக் சேனாவில் வசித்து வரும் சந்தேக நபரின் 60 வயது தாயாருடையது என்றும் அவர் தெரிவித்தார்.
தீயணைப்புத் துறையின் அறிக்கையில், அப்பகுதி சுமார் 80 சதவீதம் எரிந்துவிட்டதாகக் கூறப்பட்டுள்ளது.
தனது குடும்பத்தினருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக சந்தேக நபர் வீட்டிற்குத் தீ வைத்ததாக நம்பப்படுவதையடுத்து, அவர் தண்டனைச் சட்டத்தின் 436-வது பிரிவின் கீழ் கைது செய்யப்பட்டார்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
July 13, 2026, 5:02 pm
நஜிப்பின் விடுதலைப் பிரச்சினையை எழுப்பத் தேவையில்லை: ங்காவை ஜாஹித் சாடினார்
July 13, 2026, 4:58 pm
திருத்தம் செய்யப்பட்ட MCMC சட்டம் மக்களவையில் தாக்கல்
July 13, 2026, 4:28 pm
காஜாங்கில் சாலை விபத்து: இளம் தொழில்நுட்ப வல்லுநர் பலி
July 13, 2026, 3:35 pm
'ஹஜ் பயணத்திற்கு முதலில் பதிவு செய்தவருக்கே முன்னுரிமை': துணை அமைச்சர் மர்ஹமா ரோஸ்லி
July 13, 2026, 1:11 pm
