நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இனிவரும் காலங்களில் தேசிய முன்னணி வெளிப்படைத்தன்மை, பொறுப்புணர்வு, நேர்மைக்கு முன்னுரிமை அளிக்கும்: டத்தோ லோக பாலமோகன்

ஜொகூர்பாரு:

ஜொகூர் மாநிலத் தேர்தலில் பெற்ற மாபெரும் வெற்றி, மக்கள் மீண்டும் தேசிய முன்னணியின் மீது தங்களது நம்பிக்கையையும் விசுவாசத்தையும் வைத்திருப்பதற்கான தெளிவான சான்றாகும்.

பிபிபி கட்சியின் தலைவருமான டத்தோ டாக்டர் லோக பாலமோகன் தெரிவித்துள்ளார்.

மலேசிய மக்கள் நல்லாட்சியையும், வெளிப்படையான, பொறுப்பான, ஊழலற்ற நிர்வாகத்தையும் விரும்புகின்றனர்.

அந்த எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதில் தேசிய முன்னணி முழுமையாக அர்ப்பணிப்புடன் செயல்படும்.

கடந்த கால தவறுகள் மீண்டும் நிகழாது. மாறாக, மக்களின் உரிமைகளைப் பாதுகாத்து, திறமையான சேவை வழங்கலை உறுதி செய்யும் நேர்மையும் பொறுப்பான தலைமைத்துவமும் தேசிய முன்னணியின் முக்கிய பொறுப்பாக இருக்கும்.

மேலும் இந்திய, சீன சமூகங்கள் உட்பட அனைத்து மலேசியர்களும் தேசிய முன்னணி உள்ளடக்கிய வளர்ச்சி மற்றும் நல்லாட்சிக்கான அர்ப்பணிப்பின் பலனை அனுபவிப்பார்கள் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

ஜொகூரில் கிடைத்த இந்த மாபெரும் வெற்றி, வரவிருக்கும் நெகிரி செம்பிலான் மற்றும் மலாக்கா மாநிலத் தேர்தல்களிலும், அடுத்த பொதுத் தேர்தலிலும் நீல அலை ஒன்றை உருவாக்கும் என்பதில் தான் மிகவும் நம்பிக்கையுடன் இருப்பதாக டத்தோ டாக்டர் லோகா பாலமோகன் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset