செய்திகள் விளையாட்டு
உலகக் கிண்ணம்: கடைசி நிமிட கோலால் ஸ்பெயின் திரில் வெற்றி
லாஸ் ஏஞ்சல்ஸ்:
உலகக் கிண்ண கால்பந்து அரையிறுதிக்கு ஸ்பெயின் அணி முன்னேறியது.
இன்று நடைபெற்ற விறுவிறுப்பான காலிறுதியில், பலம் வாய்ந்த ஸ்பெயின், பெல்ஜியம் அணிகள் மோதின.
ஆட்டம் தொடங்கிய முதலே இரு அணிகளும் கோல் அடிக்க தீவிரமாகப் போராடின.
ஆட்டத்தின் 30ஆவது நிமிடத்தில் ஸ்பெயின் அணியின் நட்சத்திர வீரர் ரூயிஸ் அருமையான ஒரு கோலை அடித்து அணியை 1 - 0 என முன்னிலை பெறச் செய்தார். இதனால் ஸ்பெயின் ரசிகர்கள் உற்சாகமடைந்தனர்.
இருப்பினும், பெல்ஜியம் அணி சளைக்காமல் போராடியது.
ஆட்டத்தின் முதல் பாதி முடிவடைய சில நிமிடங்களே இருந்த நிலையில், 41ஆவது நிமிடத்தில் பெல்ஜியம் அணியின் கெட்டேலேரே ஒரு மின்னல் வேக கோல் அடித்து ஆட்டத்தை 1 - 1 என சமநிலைக்கு கொண்டு வந்தார்.
இதனால் ஆட்டத்தில் பரபரப்பு தொற்றிக்கொண்டது.
பிற்பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்க எடுத்த முயற்சிகளை எதிரணியின் தடுப்பாட்ட வீரர்கள் முறியடித்தனர்.
ஆட்டம் சமநிலையில் முடிந்து கூடுதல் நேரத்திற்குச் செல்லுமா என்று ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த வேளையில், 88ஆவது நிமிடத்தில் ஸ்பெயின் அணியின் மெரினோ ஆட்டத்தின் போக்கையே மாற்றினார்.
அவர் அடித்த அசாத்தியமான கோல் ஸ்பெயின் அணிக்கு 2 - 1 என்ற கணக்கில் வெற்றியை எளிதாக்கியது.
அதன் பின் பெல்ஜியம் அணியால் கோல் எதுவும் அடிக்க முடியாததால், 2 - 1 என்ற கணக்கில் ஸ்பெயின் அணி த்ரில் வெற்றி பெற்து, அரையிறுதிக்கு முன்னேறியது. தோல்வியடைந்த பெல்ஜியம் அணி போட்டியில் இருந்து வெளியேறியது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
August 11, 2026, 12:58 pm
காற்பந்து கோல் அடித்த மகிழ்ச்சியில் பிரேசிலிய வீரர் சுரங்கப்பாதைக்குள் குதித்தார்
August 11, 2026, 9:36 am
பிபா தலைவருக்கு எதிராக முக்கியமான 3 கூட்டமைப்புகள் போர்க்கொடி
August 11, 2026, 9:33 am
சுக்மா விளையாட்டு போட்டடியில் 35 தங்கப் பதக்கங்களை வெல்ல பகாங் மாநிலம் இலக்கு
August 10, 2026, 11:17 am
என் வாழ்வின் முக்கிய நபர், என் தந்தை மறைந்து விட்டார்: மெஸ்சி உருக்கம்
August 10, 2026, 10:28 am
அனைத்துலக நட்புமுறை ஆட்டம்: செல்சி - ஜேடிதி சமநிலை
August 9, 2026, 1:15 pm
மெஸ்ஸியின் முதல் பயிற்சியாளரான அவரது தந்தை காலமானார்
August 9, 2026, 9:06 am
2026 ஆசியான் கிண்ண அரையிறுதி சுற்றில் ஹரிமாவ் மலாயா: பவித்திரன் அசத்தல்
August 8, 2026, 9:02 am
மரடோனாவின் இறுதிக் கட்ட வேதனையை சாட்சி வெளிப்படுத்துகிறார்
August 8, 2026, 8:59 am
