நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மலாக்கா வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,000-ஐ நெருங்குகிறது

மலாக்கா:

மலாக்காவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,000-ஐ நெருங்குகிறது.

இன்று காலை 8 மணி நிலவரப்படி, 314 குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 989 பேர் ஆறு நிவாரண மையங்களுக்கு வெளியேற்றப்பட்ட நிலையில், மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

அலோர் காஜா, மத்திய் மலாக்கா ஆகிய இரண்டு மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கை அதிகரித்ததைத் தொடர்ந்து நேற்று இரவு பதிவான 970 பேர் பாதிக்கப்பட்டதை விட இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக பொது தற்காப்புப் படையின் இயக்குனர் கமாருல்ஷா தெரிவித்தார்.

அலோர் காஜா மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட 20 பேர் தாமான் மஸ்ஜித் தானா ரியா பகுதி, ஜாலான் பண்டார் பாரு மஸ்ஜித் தானா, கம்போங் பூலாவ் செமுட், கம்போங் ஸ்ரீ ஜெராம், மஸ்ஜித் தானா ஆகிய பகுதிகளை உள்ளடக்கியது.

அலோர் காஜா மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இடமளிக்க பெர்கிம் மஸ்ஜித் தானா, பாலாய் ராயா கம்போங் ஸ்ரீ ஜெரம் ஆகிய இடங்களில் இரண்டு நிவாரண மையங்கள் இன்னும் திறக்கப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்


தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset