நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நஜிப்பின் விடுதலை பிரச்சினையைத் தேர்தல் பிரச்சாரத்திற்கான மூலதனமாகப் பயன்படுத்துவதை நிறுத்துங்கள்: அன்வார்

கூலாய்:

16ஆவது ஜொகூர் மாநிலத் தேர்தலில் போட்டியிடும் கட்சிகள், டத்தோஸ்ரீ நஜிப் ரசாக்கின் விடுதலைப் பிரச்சினையை அரசியல் பிரச்சாரத்திற்கான ஒரு கருவியாகப் பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும்.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இதனை நினைவூட்டியுள்ளார்.

முன்னாள் பிரதமர் சிறைத் தண்டனை அனுபவித்து வருகிறார்.

ஆகையால் இந்தப் பிரச்சினையைத் தொடர்ந்து அரசியல்மயமாக்குவதை விடுத்து, மக்களைப் பாதுகாப்பதிலும் நாட்டின் பொருளாதாரத்தை நிர்வகிப்பதிலும் கவனம் செலுத்த வேண்டும்.

நஜிப் இப்போது சிறையில் இருக்கிறார்
அவரிடம் வம்பு வைக்க வேண்டாம். என்னைப் பொறுத்தவரை, அவ்வளவு தான்.

ஆனால் நாங்கள் இப்போது 1 எம்டிபி கடனை செலுத்திக் கொண்டிருக்கிறோம். இதுவரை அது முழுமையாகச் செலுத்தப்படவில்லை.

ஜொகூரை மீட்போம் நம்பிக்கைக்கு வாக்களியுங்கள் எனும்  நிகழ்ச்சியில் பேசிய அவர் இவ்வாறு கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset