நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அரசாங்கம் நிலையாகவும் நம்பிக்கை கூட்டணி வலுவாகவும் இருந்தால் சாரா உதவித் தொகை அதிகரிக்கப்படும்: டத்தோஸ்ரீ அன்வார்

சிம்பாங் ரெங்காம்:

அரசாங்கம் நிலையாகவும் நம்பிக்கை கூட்டணி வலுவாகவும் இருந்தால் சாரா உதவித் தொகை அதிகரிக்கப்படும்.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இதனை கூறினார்.

கூட்டரசு அரசாங்கம் நிலையாக இருந்து, நம்பிக்கை கூட்டணிக்கு மக்களின் ஆதரவு தொடர்ந்து கிடைத்தால், சாரா  உதவித் தொகையை அரசாங்கம் அதிகரிக்கும்.

அரசாங்கம் நாட்டின் நிதிகளைக் கசிவின்றி விவேகத்துடன் நிர்வகிப்பதால், இந்த உதவித் தொகையை அதிகரிக்க முடியும்.

குறிப்பாக, மக்களுக்கான சாராவை நாங்கள் இன்னும் அதிகமாக அதிகரிப்போம்.

ஏன் தெரியுமா? ஏனென்றால் நாங்கள் திருடுவதில்லை என்று நாளை நடைபெறவிருக்கும் ஜொகூர் தேர்தலை முன்னிட்டு நடைபெற்ற  மாபெரும் இறுதி பிரச்சாரத்தில்  பேசிய அவர் இவ்வாறு கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset