செய்திகள் மலேசியா
ஜோலோ சீன குழுவினருடன் மலேசியாவில் இருக்கிறாரா? அரசாங்கம் மறுப்பு
கோலாலம்பூர்-
சர்ச்சைக்குரிய தப்பியோடிய நிதியாளர் ஜோலோ என்றழைக்கப்படும் லோ தேய்க் ஜோ மலேசியாவில் சீனக்குழுவினருடன் இருப்பதாக வெளிவந்திருக்கும் தகவலை அரசாங்கம் முற்றிலுமாக மறுத்துள்ளது.
1எம்.டி.பி கடனை திருப்பி செலுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்த கடந்தாண்டு இறுதியில் சீனாவிலிருந்து மலேசியா வந்ததாக சொல்லப்படும் நிலையில் இந்த கூற்றை அரசு மறுத்தது
மக்களவையில் மூவார் நாடாளுமன்ற உறுப்பினர் சையத் சாடிக் சையத் அப்துல் ரஹ்மான், ஜோலோ குறித்து கேள்வி எழுப்பிய நிலையில் அரசாங்கத்தைப் பிரதிநிதித்து துணை நிதியமைச்சர் லியு சின் தொங் பதிலளித்தார்.
அதில், சர்ச்சைக்குரிய தப்பியோடிய நிதியாளர் ஜோலோ மலேசியாவில் இல்லை என்றும் ஜோலோ மலேசியாவில் இருக்கும் என்ற தகவல் பொய்யானது என்று தெளிவுப்படுத்தினார்.
1MDB வங்கி கணக்கிலிருந்து குறைந்தபட்சம் 4.5 பில்லியன் அமெரிக்க டாலர் (17.69 பில்லியன் மலேசிய ரிங்கிட்) நிதியைத் தவறாகப் பயன்படுத்தியதில் முக்கியப் பங்கு வகித்ததாகக் கூறப்படுவதால், லோவ் மீது அமெரிக்காவிலும் மலேசியாவிலும் ஊழல் மற்றும் பணமோசடி உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
ஜோலோவின் இருப்பிடம் தற்போது வரை தெரியவில்லை என்று தெரிவிக்கப்பட்டது
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
July 12, 2026, 5:37 pm
ஜொகூர் மாநில மந்திரி புசாராக டத்தோ ஓன் ஹபிஸ் காஸி பதவியேற்றார்
July 12, 2026, 2:25 pm
ங்கா கோர் மிங் தனது ராஜினாமா வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும்: கைரி
July 12, 2026, 2:24 pm
நஜிப் விடுதலையானால் தான் நான் ராஜினாமா செய்வேன்; தேசிய முன்னணியின் வெற்றியால் அல்ல: ங்கா
July 12, 2026, 1:53 pm
ஜாஹித் ஹமிடி, ஓன் ஹபிஸ் ஆகியோர் சுல்தான் இப்ராஹிமை சந்தித்தனர்
July 12, 2026, 12:12 pm
ஜோகூர் தேர்தல்: 55 வேட்பாளர்கள் வைப்புத்தொகையை இழந்தனர்
July 12, 2026, 10:41 am
