செய்திகள் மலேசியா
கூட்டாட்சிப் பிரதேச முஸ்லிம் அடக்கஸ்தலங்கள் தனியார்மயமாக்கப்படாது: ஜாவி அறிவிப்பு
கோலாலம்பூர்:
கூட்டாட்சிப் பிரதேச பொது மயான மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், முஸ்லிம் அடக்கச் சேவைகள் தனியார்மயமாக்கப்படாது என்று கூட்டாட்சிப் பிரதேச இஸ்லாமிய மதத் துறையான ஜாவி பொதுமக்களுக்கு உறுதியளித்துள்ளது.
ஹுலு செமெனிஹில் உள்ள லாட் PT3458-இல் இருக்கும் நிலம், கூட்டாட்சி நில ஆணையரின் கட்டுப்பாட்டிலேயே இருக்கும் என்றும், அது 222.68 ஏக்கர் பரப்பளவுள்ள பொது மயானமாக இருக்கும் என்று அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது என்றும் ஜாவி இயக்குநர் ஹனிஃபுதீன் ரோஸ்லான் கூறினார்.
மயான மேம்பாட்டுப் பணிகள் 2029-ஆம் ஆண்டில் நிறைவடையும் என்றும், அதன் பிறகு நிர்வாகத்திற்காக ஜாவியிடம் ஒப்படைக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
"இந்த மயானம் செயல்பாட்டுக்கு வந்தவுடன், தற்போதுள்ள எட்டு முஸ்லிம் மயானங்களில் செய்வது போலவே, உரிமை கோரப்படாத உடல்கள், மயானப் பராமரிப்பு உள்ளிட்ட அனைத்து அடக்க விவகாரங்களையும் நிர்வகிக்கும் முழுப் பொறுப்பையும் ஜாவி ஏற்கும்," என்று அவர் இன்று தெரிவித்தார்.
- ஃபிதா
தொடர்புடைய செய்திகள்
July 9, 2026, 11:01 pm
நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தலில் வவாசான் நெகாரா கட்சி போட்டியிடும்: ஹம்சா
July 9, 2026, 5:20 pm
ஜொகூர் தேர்தலுக்குப் பிறகு மூடா கட்சி தேசிய கூட்டணியுடன் அரசியல் ஒத்துழைப்பு இல்லை
July 9, 2026, 3:15 pm
