நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

டான்ஶ்ரீ அஸாம் பாக்கியின் விசாரணை குறித்த விபரங்களைப் பொதுவில் வெளியிடுங்கள்: சி4 மற்றும் பெர்சே அமைப்புகள் கோரிக்கை 

பெட்டாலிங் ஜெயா-

பங்குகள் வாங்கிய குற்றச்சாட்டின் பேரில் முன்னாள் எம்.ஏ.சி.சி தலைமை ஆணையர் டான்ஶ்ரீ அஸாம் பாக்கியின் விசாரணை குறித்த விபரங்களை அரசாங்கம் பொதுவில் வெளியிட வேண்டும் என்று லஞ்ச தடுப்பு அமைப்பான சி4 மற்றும் பெர்சே கோரிக்கை விடுத்துள்ளன

சட்டக் கட்டுப்பாடுகள் காரணமாக சில ஆவணங்களை வெளியிட முடியாவிட்டாலும், குழுவின் அறிக்கையின் திருத்தப்பட்ட நிர்வாகச் சுருக்கத்தை அரசாங்கம் வெளியிட வேண்டும் என்று சிவில் சமூகக் குழுக்கள் தெரிவித்தன.

2024-ஆம் ஆண்டில் பத்து புத்தே, மிடில் ராக்ஸ் மற்றும் சவுத் லெட்ஜ் குறித்த அரச விசாரணை ஆணையத்தின் அறிக்கையின் விஷயத்திலும் அரசாங்கம் இதேபோன்ற அணுகுமுறையைக் கையாண்டதாக அவர்கள் கூறினர். 

அந்த அறிக்கையில், முக்கியமான தகவல்கள் நீக்கப்பட்டு, மற்ற கண்டுபிடிப்புகள் பொதுமக்களுக்கு வெளியிடப்பட்டன.

அஸாம்மின்  விசாரணை தொடர்பாக, எந்த ஆதாரமும் இன்றி அரசாங்கத்தின் வெறும் கூற்றுகளை மட்டும் ஏற்றுக்கொள்ளுமாறு மலேசியர்கள் கட்டாயப்படுத்தப்படுவதாக அவர்கள் தெரிவித்தனர்.

ஊழலுக்குச் சற்றும் சகிப்புத்தன்மை இல்லை என்று கூறிக்கொள்ளும் ஒரு நிர்வாகத்திடம் இருந்து, மலேசியர்கள் முன்முயற்சியுடன் கூடிய வெளிப்படைத்தன்மையை எதிர்பார்ப்பதாக சி4 மற்றும் பெர்சே அமைப்புகளும் தெரிவித்தன.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset