செய்திகள் மலேசியா
அதிருப்தி, துன்புறுத்தப்பட்ட உணர்வு காரணமாக சந்தேக நபர் பள்ளியில் கத்திக்குத்து புரிந்தார்
பெட்டாலிங் ஜெயா-
அதிருப்தி, துன்புறுத்தப்பட்ட உணர்வு காரணமாக சந்தேக நபர் ஒருவர் பந்திங்கில் உள்ள இடைநிலைப்பள்ளியில் கத்திக்குத்து தாக்குதலை நிகழ்த்தியுள்ளார்
இந்த தகவலை சிலாங்கூர் மாநில காவல்துறை தலைவர், ஷசெலி கஹார் கூறினார்.
இந்த சம்பவம் தொடர்பாக பல்வேறு தரப்பினர் காவல்துறையினர் விசாரணையை மேற்கொண்டனர் என்று அவர் குறிப்பிட்டார்.
விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இன்னும் விசாரணைகள் முடியவில்லை என்று அவர் சொன்னார்.
சந்தேக நபர் பெரும் மன உளைச்சலில் இருந்ததாகவும் குடும்ப வன்முறை காரணமாக அவருக்கு இந்த மன உளைச்சல் ஏற்பட்டிருக்கலாம் என்று அவர் சொன்னார்.
கத்திக்குத்துக்கு இலக்கான பாதிக்கப்பட்ட மாணவியின் உடல்நிலை சீராக இருப்பதாகவும் மடுத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்நிலையில் காவல்துறை தரப்பு மருத்துவ குழுவின் அதிகாரப்பூர்வ அறிக்கைக்காக காத்திருக்கிறது என்று அவர் சொன்னார்.
இந்த சம்பவம் குற்றவியல் சட்டத்தின் செக்ஷன் 307யின் கீழ் விசாரணை செய்யப்படுவதாக என்றார்
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
July 9, 2026, 11:01 pm
நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தலில் வவாசான் நெகாரா கட்சி போட்டியிடும்: ஹம்சா
July 9, 2026, 5:20 pm
ஜொகூர் தேர்தலுக்குப் பிறகு மூடா கட்சி தேசிய கூட்டணியுடன் அரசியல் ஒத்துழைப்பு இல்லை
July 9, 2026, 4:46 pm
கூட்டாட்சிப் பிரதேச முஸ்லிம் அடக்கஸ்தலங்கள் தனியார்மயமாக்கப்படாது: ஜாவி அறிவிப்பு
July 9, 2026, 3:15 pm
