செய்திகள் மலேசியா
பெட்ரோல், டீசல் விலைகளில் மாற்றமில்லை
புத்ராஜெயா:
மானியமில்லா பெட்ரோல், டீசலின் சில்லறை விலைகள் நாளை ஜூலை 9 முதல் ஜூலை 15 வரையிலான காலத்திற்கு, தற்போதைய விலைகளிலேயே நீடிக்கின்றன.
ரோன் 97இன் சில்லறை விலை ஒரு லிட்டருக்கு 4 ரிங்கிட் ஆகவும், ரோன் 95 ஒரு லிட்டருக்கு 3.37 ரிங்கிட்டாகவும், டீசல் ஒரு லிட்டருக்கு 3.97 ரிங்கிட்டாகவும் நீடிக்கும் என்று அரசாங்கம் இன்று அறிவித்தது.
மானியப் பெட்ரோலின் விலை முன்பிருந்தபடியே நீடிக்கும்.
அதாவது, பூடி 95 திட்டத்தின் கீழ் ரோன் 95 ஒரு லிட்டருக்கு 1.99 ரிங்கிட்டாகவும், பூடி டீசல் திட்டத்தின் கீழ் டீசல் ஒரு லிட்டருக்கு 2.10 ரிங்கிட்டாகவும் விற்கப்பட்டன.
மேலும் மானிய பெட்ரோல் கட்டுப்பாட்டு அமைப்பின் கீழ் பெட்ரோல் ஒரு லிட்டருக்கு 2.05 ரிங்கிட்டாகவும், மானிய டீசல் கட்டுப்பாட்டு அமைப்பின் கீழ் டீசல் ஒரு லிட்டருக்கு 2.15 ரிங்கிட்டாகவும் இருக்கும்.
புவிசார் அரசியல் இடர் பிரீமியங்கள் குறைதல், விநியோக ஓட்டம் சீரடைதல், முக்கிய உற்பத்தியாளர்களிடையே அதிகரித்த விலைப்போட்டி ஆகியவற்றின் காரணமாக, கடந்த வாரத்தில் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலைகள் தொடர்ந்து மிதமாக இருந்தன என்று நிதியமைச்சு கூறியது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 12, 2026, 5:37 pm
ஜொகூர் மாநில மந்திரி புசாராக டத்தோ ஓன் ஹபிஸ் காஸி பதவியேற்றார்
July 12, 2026, 2:25 pm
ங்கா கோர் மிங் தனது ராஜினாமா வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும்: கைரி
July 12, 2026, 2:24 pm
நஜிப் விடுதலையானால் தான் நான் ராஜினாமா செய்வேன்; தேசிய முன்னணியின் வெற்றியால் அல்ல: ங்கா
July 12, 2026, 1:53 pm
ஜாஹித் ஹமிடி, ஓன் ஹபிஸ் ஆகியோர் சுல்தான் இப்ராஹிமை சந்தித்தனர்
July 12, 2026, 12:12 pm
ஜோகூர் தேர்தல்: 55 வேட்பாளர்கள் வைப்புத்தொகையை இழந்தனர்
July 12, 2026, 10:41 am
