செய்திகள் மலேசியா
அந்நியத் தொழிலாளர்களுக்கு FWCMS வாயிலாக நேரடியாக விண்ணப்பம் செய்யும் நடைமுறையை பிரெஸ்மா வரவேற்கிறது: டத்தோ மோசின்
கோலாலம்பூர்:
அந்நியத் தொழிலாளர்களுக்கு FWCMS வாயிலாக நேரடியாக விண்ணப்பம் செய்யும் நடைமுறையை பிரெஸ்மா வரவேற்கிறது என்று அதன் தலைவர் டத்தோ மோசின் கூறினார்.
அந்நியத் தொழிலாளர் மேலாண்மைக்கான ஒரு நிறுத்த மையத்தை உள்துறை அமைச்சரிடமிருந்து மனிதவள அமைச்சு அதிகாரப்பூர்வமாகப் பொறுப்பேற்றுள்ளது.
அந்நியத் தொழிலாளர் ஒதுக்கீட்டு விண்ணப்பங்கள், அந்நியத் தொழிலாளர் மையப்படுத்தப்பட்ட மேலாண்மை அமைப்பில் (FWCMS) உள்ள eQuota மூலம் செயல்படுத்தப்படவுள்ளது.
அந்நியத் தொழிலாளர்கள் தேவைப்படும் முதலாளிகள், நிறுவனங்கள் இன்று முதல் நேரடியாக இதன் மூலம் விண்ணப்பம் செய்யலாம்.
இப்புதிய நடைமுறை அந்நியத் தொழிலாளர் பிரச்சினைகளுக்கு முழு தீர்வை வழங்கும் என மனிதவள அமைச்சர் டத்தோஶ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் அறிவித்தார்.
மனிதவள அமைச்சரின் இந்த அறிவிப்பை பிரெஸ்மா எனும் மலேசிய முஸ்லிம் உணவக உரிமையாளர்கள் சங்கம் முழுமையாக வரவேற்கிறது.
இலக்கவியல் வாயிலாக விண்ணப்பம் செய்வதால் அனைத்தும் வெளிப்படையாக இருக்கும். எந்தவொரு குளறுபடிகளும் இருக்காது என பிரெஸ்மா நம்புகிறது.
இவ்வேளையில் மனிதவள அமைச்சர் டத்தோஶ்ரீ ரமணனுக்கும் அரசாங்கத்திற்கும் பிரெஸ்மா நன்றியை தெரிவித்துக் கொள்கிறது.
அதே வேளையில் FWCMS வாயிலாக விண்ணப்பம் செய்யும் துறைகளில் உணவகத் துறை இல்லை. புதிய நடைமுறை என்பதால் ஒரு சில சிக்கல்கள் இருக்கும்.
ஆக உணவகத் துறையினர் அமைதியாக இருக்க வேண்டும். விரைவில் உரிய தீர்வு கிடைக்கும் என பிரெஸ்மா நம்புகிறது என்று டத்தோ மோசின் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 12, 2026, 5:37 pm
ஜொகூர் மாநில மந்திரி புசாராக டத்தோ ஓன் ஹபிஸ் காஸி பதவியேற்றார்
July 12, 2026, 2:25 pm
ங்கா கோர் மிங் தனது ராஜினாமா வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும்: கைரி
July 12, 2026, 2:24 pm
நஜிப் விடுதலையானால் தான் நான் ராஜினாமா செய்வேன்; தேசிய முன்னணியின் வெற்றியால் அல்ல: ங்கா
July 12, 2026, 1:53 pm
ஜாஹித் ஹமிடி, ஓன் ஹபிஸ் ஆகியோர் சுல்தான் இப்ராஹிமை சந்தித்தனர்
July 12, 2026, 12:12 pm
ஜோகூர் தேர்தல்: 55 வேட்பாளர்கள் வைப்புத்தொகையை இழந்தனர்
July 12, 2026, 10:41 am
