செய்திகள் மலேசியா
மை எக்ஸ்போ டிலி 2.0; மலேசியா, திமோர் லெஸ்தே இடையிலான வர்த்தக உறவுகளை வலுப்படுத்துகிறது: 25 மலேசிய நிறுவனங்கள் முதலீட்டு வாய்ப்புகளை ஆராய்ந்தன
டிலி:
மை எக்ஸ்போ டிலி 2.0 விழா மலேசியா, திமோர் லெஸ்தே இடையிலான வர்த்தக உறவுகளை மேலும் வலுப்படுத்துகிறது.
மை இவென்ட்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் நிர்வாகி டைலான் கூறினார்.
கடந்த இரண்டு நாட்கள் நடைபெற்ற இந்த அனைத்துலக வர்த்தகக் கண்காட்சி, நாட்டின் பொருளாதாரத்தில் உள்ள சந்தை ஆற்றல், ஒத்துழைப்பு வாய்ப்புகளை ஆராய்வதற்காக 25 மலேசிய நிறுவனங்கள், 35 வர்த்தகப் பிரதிநிதிகள் அடங்கிய ஒரு குழுவை ஒன்றிணைத்தது.
வளர்ந்து வரும் திமோர் லெஸ்தே சந்தையில் தங்கள் வணிக வலையமைப்புகளை விரிவுபடுத்த ஆர்வமுள்ள பல்வேறு தொழில் துறையினரின் பங்கேற்புடன், இந்த நிகழ்வு மை இவென்ட்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் ஏற்பாட்டில் டிலி மாநாட்டு மையத்தில் நடைபெற்றது.
இந்த விழாவில், திமோர் லெஸ்தே குடியரசின் வெளியுறவுத் துறை துணையமைச்சர் ஜெஸ்வினா கோமஸ் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
டிலியில் உள்ள மலேசிய தூதரகத்தின் தூதர் ஜெமிமா உஜாங், வெஸ்ட் ஸ்டார் ஏவியேஷனின் இயக்குநர் டத்தோ அனுவார் நோர்டின், மலேசியா சுற்றுலாத் துறையின் ஜாகார்த்தாஇயக்குநர் ஹேரி, அத்துடன் தொழில்துறைத் தலைவர்கள், வணிகப் பிரமுகர்கள், அனைத்துலக ஊடகப் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.
கடந்த ஆண்டு கோலாலம்பூரில் நடைபெற்ற ஆசியான் உச்ச நிலை மாநாட்டில் திமோர் லெஸ்தே அதிகாரப்பூர்வமாக ஆசியானில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு முக்கியமான தருணத்தில், மை எக்ஸ்போ டிலியின் இரண்டாவது பதிப்பு நடைபெற்றது.
மை இவென்ட்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின்படி, மை எக்ஸ்போ டிலி 2.0 என்பது ஒரு வர்த்தக நிகழ்வு மட்டுமல்ல, மாறாக இது இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதையும், இரு நாடுகளுக்கும் இடையிலான மூலோபாய ஒத்துழைப்புக்கு வழிவகுப்பதையும் நோக்கமாகக் கொண்ட ஒரு நீண்டகால பொருளாதார ஊக்கியாகும்.
மேலும் திமோர் லெஸ்தேவில் ஒரு நிலையான பொருளாதாரக் கட்டமைப்பை உருவாக்குவதில் தனது தரப்பு உறுதியாக உள்ளது.
மேலும் பல அனைத்துலக வர்த்தக நிகழ்வுகளையும் மாநாடுகளையும் நாட்டிற்குக் கொண்டுவருவதற்காக டிலியில் ஒரு நிரந்தர செயல்பாட்டுத் தளத்தை நிறுவுவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்வதும் இதில் அடங்கும் என்று டைலான் தெரிவித்தார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 12, 2026, 5:37 pm
ஜொகூர் மாநில மந்திரி புசாராக டத்தோ ஓன் ஹபிஸ் காஸி பதவியேற்றார்
July 12, 2026, 2:25 pm
ங்கா கோர் மிங் தனது ராஜினாமா வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும்: கைரி
July 12, 2026, 2:24 pm
நஜிப் விடுதலையானால் தான் நான் ராஜினாமா செய்வேன்; தேசிய முன்னணியின் வெற்றியால் அல்ல: ங்கா
July 12, 2026, 1:53 pm
ஜாஹித் ஹமிடி, ஓன் ஹபிஸ் ஆகியோர் சுல்தான் இப்ராஹிமை சந்தித்தனர்
July 12, 2026, 12:12 pm
ஜோகூர் தேர்தல்: 55 வேட்பாளர்கள் வைப்புத்தொகையை இழந்தனர்
July 12, 2026, 10:41 am
