செய்திகள் மலேசியா
மாநிலத் தேர்தலுக்குப் பிந்தைய ஒத்திகைக்காக நாளையும் நாளை மறுநாள் வெள்ளிக்கிழமையும் சிரம்பனின் பல முக்கிய சாலைகள் மூடப்படும்
சிரம்பான்:
16வது நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தலுக்கான ஒத்திகையை நடத்துவதற்காக, சிரம்பான் நகர மையத்தில் உள்ள பல முக்கிய சாலைகள் வியாழன், வெள்ளிக்கிழமைகளில் கட்டம் கட்டமாக மூடப்பட்டு, போக்குவரத்து மாற்றிவிடப்படும். இந்த ஒத்திகை, ஜாலான் யாம் துவானில் உள்ள செரம்பான் நகர மன்ற (MBS) மண்டபத்தில் நடைபெறும்.
நாளை மாலை 3 மணி முதல் 5 மணி வரை ஒத்திகைக்காகவும், ஜூலை 10 அன்று மாலை 3 மணி முதல் 5.30 மணி வரை தேர்தலுக்குப் பிந்தைய ஒத்திகைக்காகவும் சாலை மூடல்கள் அமல்படுத்தப்படும் என்று செரம்பான் மாவட்ட காவல்துறைத் தலைவர் ஏசிபி முஹம்மது யாதிம் உஸ்மான் கூறினார்.
ஜாலான் யாம் துவான், ஜாலான் டத்தோ ஷேக் அஹ்மத், லோரோங் கல்சா, ஜாலான் லிம் கீ சியோங் ஆகியவை பாதிக்கப்படும் முக்கிய சாலைகளில் அடங்கும் என்றும் அவர் கூறினார்.
"ஜாலான் துவாங்கு ஹாசன்/ஜாலான் யாம் துவான் (மதுரா), ஜலான் லீ ஃபாங் யீ / ஜாலான் யாம் துவான், ஜாலான் லிம் கீ சியோங் /ஜாலான் ஜாவா, லோரோங் கல்சா/லோரோங் ஜாவா ஆகியவை பாதிக்கப்பட்ட சந்திப்புகள் மற்றும் சாலைகள் மூடப்படும் அல்லது திருப்பிவிடப்படும்" என்று அவர் தெரிவித்தார்.
ஜாலான் டத்தோ அப்துல் மாலிக், ஜாலான் துவாங்கு ஹாசன், ஜாலான் துவாங்கு முனாவிர், ஜாலான் டத்தோ அப்துல் காதிர் உள்ளிட்ட மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு வாகன ஓட்டிகள் அறிவுறுத்தப்படுகிறார்கள் என்று முஹம்மத் யாதிம் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 12, 2026, 5:37 pm
ஜொகூர் மாநில மந்திரி புசாராக டத்தோ ஓன் ஹபிஸ் காஸி பதவியேற்றார்
July 12, 2026, 2:25 pm
ங்கா கோர் மிங் தனது ராஜினாமா வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும்: கைரி
July 12, 2026, 2:24 pm
நஜிப் விடுதலையானால் தான் நான் ராஜினாமா செய்வேன்; தேசிய முன்னணியின் வெற்றியால் அல்ல: ங்கா
July 12, 2026, 1:53 pm
ஜாஹித் ஹமிடி, ஓன் ஹபிஸ் ஆகியோர் சுல்தான் இப்ராஹிமை சந்தித்தனர்
July 12, 2026, 12:12 pm
ஜோகூர் தேர்தல்: 55 வேட்பாளர்கள் வைப்புத்தொகையை இழந்தனர்
July 12, 2026, 10:41 am
