செய்திகள் மலேசியா
பெர்கேசோவின் LINDUNG 24 Jam பாதுகாப்புத் திட்டம்; தொழிலாளர்களை முழுமையாக பாதுகாக்கிறது: எட்மண்ட் சியோங்
கோலாலம்பூர்:
பெர்கேசோவின் LINDUNG 24 Jam பாதுகாப்புத் திட்டம் அனைத்து தொழிலாளர்களுக்கும் முழு நேரப் பாதுகாப்பை வழங்குகிறது.
பெர்கேசோவின் வியூகப் பிரிவின் துணை தலைமை நிர்வாக அதிகாரி எட்மண்ட் சியோங் இதனை கூறினார்.
பெர்கேசோவின் LINDUNG 24 Jam எனும் 24 மணி நேர பாதுகாப்பு திட்டம் கடந்த ஜூன் 1ஆம் தேதி அமலுக்கு வந்தது.
பணி காலத்தில் தகுதியுள்ள அனைத்து ஊழியர்களுக்கும் 24 மணி நேர பாதுகாப்பு இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும்.
குறிப்பாக பணியிடத்திற்கு வெளியே, தனிப்பட்ட பயணங்கள், விளையாட்டு அல்லது வீட்டில் நடக்கும் எதிர்பாராத விபத்துகளுக்கும் பாதுகாப்பு அளிக்கிறது.
இந்தத் திட்டத்தின் கீழ் ஏற்படும் விபத்துகளுக்கான மருத்துவச் சிகிச்சைச் செலவுகளை பெர்கேசோ ஏற்கும்.
LINDUNG 24 Jam திட்டம் அமலுக்கு வந்த 1 மாத காலத்தில் மட்டும் கிட்டத்தட்ட 592 இழப்பீடு கோரிக்கைகள் பெர்கேசோவிற்கு கிடைத்துள்ளது.
இது ஒரு நாளைக்கு 20 விண்ணப்பங்கள் என்ற அடிப்படையில் கணக்கிடப்பட்டுள்ளது.
அதே வேளையில் இந்த ஒரு மாதத்தில் மட்டும் கிட்டத்தட்ட 1,277,516 மில்லியன் ரிங்கிட் இழப்பீடாக செலுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் பெர்கேசோவின் சந்தாதாரர்கள் பெருமளவில் பயனடைந்துள்ளனர் என்று அவர் கூறினார்.
இந்த LINDUNG 24 Jam பாதுகாப்புத் திட்டத்திற்கு மாதாந்திர ஊதியத்தில் 0.75 சதவீத பங்களிக்க வேண்டும்.
தொழிலாளர்கள் மிகவும் குறைந்த அளவில் நிர்ணயிக்கப்பட்ட இந்தக் கட்டணத்தை ஒரு சுமையாகக் கருதாமல், எதிர்காலப் பாதுகாப்பிற்கான ஒரு முதலீடாகப் பார்க்க வேண்டும்
விபத்துகள் எந்த நேரத்திலும் நிகழலாம் என்பதால், தொழிலாளர்கள் தங்களையும் தங்கள் குடும்பத்தையும் பாதுகாக்க இத்திட்டத்தில் இணைந்திருப்பது அவசியமானது.
குறிப்பாக அனைத்து தொழிலாளர்களும் இந்த பெர்கேசோவின் LINDUNG 24 Jam பாதுகாப்புத் திட்டம் குறித்து விழிப்புணர்வை பெற வேண்டும் என எட்மண்ட் சியோங் வலியுறுத்தினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 12, 2026, 5:37 pm
ஜொகூர் மாநில மந்திரி புசாராக டத்தோ ஓன் ஹபிஸ் காஸி பதவியேற்றார்
July 12, 2026, 2:25 pm
ங்கா கோர் மிங் தனது ராஜினாமா வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும்: கைரி
July 12, 2026, 2:24 pm
நஜிப் விடுதலையானால் தான் நான் ராஜினாமா செய்வேன்; தேசிய முன்னணியின் வெற்றியால் அல்ல: ங்கா
July 12, 2026, 1:53 pm
ஜாஹித் ஹமிடி, ஓன் ஹபிஸ் ஆகியோர் சுல்தான் இப்ராஹிமை சந்தித்தனர்
July 12, 2026, 12:12 pm
ஜோகூர் தேர்தல்: 55 வேட்பாளர்கள் வைப்புத்தொகையை இழந்தனர்
July 12, 2026, 10:41 am
