செய்திகள் மலேசியா
ஜோகூர் தேர்தல்: நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து அதிகரிக்கும்
ஜோகூர் பாரு:
வரும் சனிக்கிழமை நடைபெறவிருக்கும் ஜோகூர் மாநிலத் தேர்தலை முன்னிட்டு வெளி மாநிலங்களில் வசிக்கும் மூன்று லட்சத்திற்கும் அதிகமான வாக்காளர்கள் தங்களின் ஜனநாயகக் கடமையை நிறைவேற்றுவதற்காக, சொந்த ஊர்களுக்குத் திரும்புவார்கள் என்று மலேசிய நெடுஞ்சாலை வாரியம் கணித்துள்ளது.
அதனால், அத்தினத்தன்று ஜோகூரில் உள்ள நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து நெரிசல் அதிகரிக்கும் என்றும் அவ்வாரியம் தெரிவித்துள்ளது.

எனவே, ஜோகூருக்குள் நுழைய அல்லது அவ்வழியாகச் செல்லத் திட்டமிடுபவர்கள், மாநிலத்திற்குச் செல்லும் முக்கிய சாலைகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க தங்கள் பயணத்தை முன்கூட்டியே திட்டட்டுக் கொள்ளுமாறு,அதன் தலைவர் டத்தோ ஶ்ரீ ஹஸ்னி கேட்டுக் கொண்டார்.
மேலும், பயணிகள் தங்கள் பயணங்களை TuJu செயலி மூலம் திட்டமிடுமாறும், அத்துடன் வாகனம் நல்ல நிலையில் இருப்பதையும், தங்களது TOUNCH AND GO, E- WALLET அட்டையில் போதுமான இருப்புத் தொகையையும் உறுதி செய்துகொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப்படுவதாகவும் அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 12, 2026, 5:37 pm
ஜொகூர் மாநில மந்திரி புசாராக டத்தோ ஓன் ஹபிஸ் காஸி பதவியேற்றார்
July 12, 2026, 2:25 pm
ங்கா கோர் மிங் தனது ராஜினாமா வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும்: கைரி
July 12, 2026, 2:24 pm
நஜிப் விடுதலையானால் தான் நான் ராஜினாமா செய்வேன்; தேசிய முன்னணியின் வெற்றியால் அல்ல: ங்கா
July 12, 2026, 1:53 pm
ஜாஹித் ஹமிடி, ஓன் ஹபிஸ் ஆகியோர் சுல்தான் இப்ராஹிமை சந்தித்தனர்
July 12, 2026, 12:12 pm
ஜோகூர் தேர்தல்: 55 வேட்பாளர்கள் வைப்புத்தொகையை இழந்தனர்
July 12, 2026, 10:41 am
