செய்திகள் மலேசியா
அந்நியத் தொழிலாளர்களுக்கு FWCMS வாயிலாக விண்ணப்பம்; வெளிப்படையானதாக இருக்கும்: டத்தோ அப்துல் ஹமித்
கோலாலம்பூர்:
அந்நியத் தொழிலாளர்களுக்கு FWCMS வாயிலாக விண்ணப்பம் செய்யும் நடைமுறை வெளிப்படையானதாக இருக்கும்.
மிக்கோய்ன் தலைவத் டத்தோ ஹாஜி பிவி அப்துல் ஹமித் இதனை கூறினார்.
அந்நியத் தொழிலாளர் மேலாண்மைக்கான ஒற்றை இலக்கவியல் தளமாக அந்நியத் தொழிலாளர் மையப்படுத்தப்பட்ட மேலாண்மை அமைப்பின் (FWCMS) இ-கோட்டா (eQuota) பயன்படுத்தப்படும்.
இதன் மூலம் அந்நியத் தொழிலாளர்கள் தேவைப்படும் முதலாளிகள், நிறுவனங்கள் இன்று முதல் நேரடியாக இதன் மூலம் விண்ணப்பம் செய்யலாம்.
நடுவில் எந்தவொரு தரப்பினரும் இல்லாமல் நேரடியாக விண்ணப்பம் செய்யலாம்.
குறிப்பாக அந்நியத் தொழிலாளர்கள் தேவைப்படும் இந்திய தொழில் துறைகளும் இதன் வாயிலாக விண்ணப்பம் செய்யலாம் என அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் அறிவித்துள்ளார்.
அமைச்சரின் இந்த அறிவிப்பை மிம்கோய்ன் முழுமையாக வரவேற்கிறது.
ஒரு தொழில் முனைவர் என்ற அடிப்படையில் இப்புதிய நடைமுறையை நான் வரவேற்கிறேன்.
அந்நியத் தொழிலாளர்கள் கிடைக்காமல் பல தொழில் துறையினர் பாதிக்கப்பட்டு வந்தனர்.
ஆனால் இப்போது அத்தொழில் துறையினர் நேரடியால் தொழிலாளர்களுக்கு விண்ணப்பம் செய்யலாம்.
இலக்கவியல் வாயிலாக விண்ணப்பம் செய்வதால் அனைத்தும் வெளிப்படையாக இருக்கும். எந்தவொரு குளறுபடிகளும் இருக்காது.
ஆகவே அந்நியத் தொழிலாளர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும் என டத்தோ அப்துல் ஹமித் நம்பிக்கை தெரிவித்தார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 12, 2026, 5:37 pm
ஜொகூர் மாநில மந்திரி புசாராக டத்தோ ஓன் ஹபிஸ் காஸி பதவியேற்றார்
July 12, 2026, 2:25 pm
ங்கா கோர் மிங் தனது ராஜினாமா வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும்: கைரி
July 12, 2026, 2:24 pm
நஜிப் விடுதலையானால் தான் நான் ராஜினாமா செய்வேன்; தேசிய முன்னணியின் வெற்றியால் அல்ல: ங்கா
July 12, 2026, 1:53 pm
ஜாஹித் ஹமிடி, ஓன் ஹபிஸ் ஆகியோர் சுல்தான் இப்ராஹிமை சந்தித்தனர்
July 12, 2026, 12:12 pm
ஜோகூர் தேர்தல்: 55 வேட்பாளர்கள் வைப்புத்தொகையை இழந்தனர்
July 12, 2026, 10:41 am
