நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் வணிகம்

By
|
பகிர்

மலேசியாவின் மின்னிலக்க உருமாற்றத்துக்கு 5ஜி சேவை பெரும் பங்களிப்பைத் தரும்: Ericsson நிறுவனம்

கோலாலம்பூர்:

மலேசியாவுக்கு அனைத்துலக தரத்திலான 5ஜி சேவை வழங்கப்படும் என எரிக்சன் Ericsson நிறுவனத்தின் தலைவரும் முதன்மைச் செயல் அதிகாரியுமான  Ekholm, தெரிவித்துள்ளார்.
Digital Nasional Berhad மற்றும் எரிக்சன் ஆகிய இரண்டும் இதற்காக இணைந்து செயல்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

5ஜி சேவை அறிமுகமாவது மலேசிய தொலைத்தொடர்புத்துறையின் பயணத்தில் மிக முக்கியமான தருணம் என்றும், மலேசியர்களுக்கு உலகத்தரம் வாய்ந்த 5ஜி சேவையை வழங்குவதில் மகிழ்ச்சி அடைவதாகவும் Ekholm கூறினார்.

4ஜி தொழில்நுட்டம் மிகப்பெரிய புத்தாக்க முயற்சியாகவும், புத்தாக்கத்துக்கான மிகப்பெரிய களமாகவும் அமைந்தது என்றும். அதேபோல் 5ஜி தொழில்நுட்பமும் புத்தாகத்துக்கான பிரமாண்ட தளமாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

Ericsson warns of China retaliation following Sweden's Huawei ban |  Financial Times

மேலும், மலேசியாவின் மின்னிலக்க உருமாற்றத்துக்கு 5ஜி சேவை பெரும் பங்களிப்பைத் தரும் என்றும் குறிப்பிட்டார்.

"எரிக்சன் நிறுவனம் தற்போது 108 இடங்களில் நேரடி 5ஜி சேவையை வெற்றிகரமாக அளித்து வருகிறது. இது உலகின் ஒட்டுமொத்த 5ஜி வலைப்பின்னலில் பாதிக்கும் மேற்பட்டதாகும். மேலும், உலகளவில் இதுவரை 48 நாடுகள் 5ஜி சேவையை அளித்து வருகின்றன. அந்நாடுகள் அனைத்திலும் எரிக்சன் உள்ளது.

"புத்தாக்கம் மற்றும் நம்பகத்தன்மை ஆகியவற்றில்தான் எரிக்சன் முழுக் கவனத்தையும் செலுத்தி வருகிறது. அதனால்தான் எங்களை நம்பகத்துக்குரிய 5ஜி சேவை அளிக்கும் நிறுவனமாக பல நாடுகள் கருதுகின்றன. அமெரிக்கா உள்ளிட்ட அதிக சேவையை எதிர்பார்க்கும் வளர்ச்சி அடைந்த நாடுகளிலும் நாங்கள் சேவையாற்றி வருகிறோம்.

"மலேசியாவில் DNB உடன் இணைந்து பணியாற்றுகிறோம். 5ஜி நிறுவனத்துக்கான பணி எரிக்சனிடம் ஒப்படைக்கப்பட்ட ஆறு மாதங்களுக்குள், புத்ராஜெயா, சைபர்ஜெயா, கோலாலம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் அந்தச்சேவையை அளிக்கத் தொடங்கிவிட்டோம். 2024ஆம் ஆண்டுக்குள் சுமார் 80 விழுக்காடு பகுதிகளில் எங்களால் 5ஜி சேவையை அளிக்க இயலும்," என்றார் Ekholm.

தொடர்புடைய செய்திகள்

+ - reset