செய்திகள் தமிழ் தொடர்புகள்
அரசுப் பள்ளி ஆய்வுக்குப் பின் வைரலாகும் ஹேண்ட்ஸ் ஆஃப் டு ஆல் என்ற கீர்த்தனா விடியோ
சென்னை:
அரசுப் பள்ளிக்குச் சென்று மாணவியிடம் ஆங்கிலத்தில் கேள்வி எழுப்பி, மாணவி பதில் சொல்லாமல் இருந்ததை விமர்சித்த அமைச்சர் கீர்த்தனாவின் நடவடிக்கையால், ஹேட்ஸ் ஆப் என்பதற்கு பதிலாக ஹேண்ட்ஸ் ஆஃப் டு ஆல் என்று சொன்ன காணொலி வைரலாகி வருகிறது.
சென்னையில் நடைபெற்ற விளையாட்டு நிகழ்ச்சி ஒன்றில், ஹேட்ஸ் ஆஃப் டு ஆல் என்பதற்கு பதிலாக ஹேண்ட்ஸ் ஆஃப் டு ஆல் என்று பேசியிருந்த விடியோவை பலரும் வைரலாக்கியிருக்கிறார்கள்.
தமிழ்நாடு தொழில், முதலீட்டு ஊக்கத் துறை அமைச்சர் கீர்த்தனா சில நாள்களுக்கு முன் திருத்தங்கல் எஸ்.ஆர்.என். அரசுப் பள்ளிக்குச் சென்று ஆய்வு செய்தார்.
அப்போது பள்ளி மாணவியிடம் ஆங்கிலத்தில் கேள்வி எழுப்பினார். அந்த மாணவி பதில் சொல்லத் தயங்கிய நிலையில், இவரே இப்படி என்றால், கடைசி பெஞ்சில் இருப்பவர்கள் என்று விமர்சித்ததோடு, ஆசிரியரிடம் ஆங்கில வகுப்புகளை மேம்படுத்துமாறு அமைச்சர் கீர்த்தனா வலியுறுத்தினார். அந்த விடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
அமைச்சர் ஒருவர் இவ்வாறு அரசுப் பள்ளி மாணவியிடம் கேள்வி எழுப்புவது, கடைசி பெஞ்ச் குறித்து விமர்சிப்பது நாகரிகமற்றது எனற அமைச்சர் கீர்த்தனா மீது பல்வேறு தரப்பினரும் கடும் விமர்சனங்களை முன் வைத்துள்ளனர்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
October 9, 2026, 6:34 am
மாணவா்களுடன் கலந்துரையாட ராகுல் காந்தி நாளை சென்னை வருகிறார்
October 6, 2026, 5:41 pm
தமிழகத்தின் 23 மாவட்டங்களில் இன்று மிதமான மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
October 6, 2026, 11:29 am
மதுராந்தகம், தாராபுரம் ஆகிய தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கியது
October 5, 2026, 12:04 pm
தாராபுரம், மதுராந்தகம் தொகுதிகளில் இடைத்தேர்தல்: தொகுதிகளுக்குட்பட்ட பள்ளிகளுக்கு இரு நாள்கள் விடுமுறை
October 4, 2026, 12:18 pm
தமிழ்நாட்டில் ஒரே நாளில் 500 மி.மீ. மழைப்பொழிவுக்கு வாய்ப்பு
October 3, 2026, 5:00 pm
"ஆபாசம், வன்மம், வக்கிரம்...": ஸ்டாலினைக் வன்மையாகச் சாடிய விஜய்
October 1, 2026, 5:51 pm
தாராபுரத்தில் சத்தியபாமா காதில் அமைச்சர் ராஜ் மோகன் சொன்னது என்ன?: அமைச்சர் தன்னிலை விளக்கம்
September 30, 2026, 1:33 pm
பட்டினப்பாக்கத்தில் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்: புதிய தலைமைச் செயலகம் அமைக்க கடும் எதிர்ப்பு
September 29, 2026, 10:14 pm
