நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

உலகக் கிண்ணம்: எம்பாப்பே கோலால் காலிறுதிக்கு முன்னேறியது பிரான்ஸ்

நியூயார்க்:

உலகக் கிண்ணக் கால்பந்து போட்டியில் எம்பாப்பே கோலால் பிரான்ஸ் அணி காலிறுதி சுற்றுக்கு முன்னேறியது.

நியூயார்க்கில் நடைபெற்ற சுற்று 16 ஆட்டத்தில் பலத்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே பிரான்ஸ் அணி, பராகுவே அணியை எதிர்கொண்டது. 

பலம் வாய்ந்த பிரான்ஸ் அணிக்கு பராகுவே வீரர்கள் தங்களது அசாத்திய தடுப்பாட்டத்தால் கடும் சவால் அளித்தனர். 

இதனால் ஆட்டத்தின் பெரும்பகுதி கோல் ஏதுமின்றி வறட்சியாகவே சென்றது.

ஆட்டத்தின் 70ஆவது நிமிடத்தில் பிரான்ஸ் அணிக்கு பொன்னான பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. ​

இந்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திய கிலியன் எம்பாப்பே, பந்தை லாவகமாக கோல் வலைக்குள் அடித்தார்.

இதன் மூலம் பிரான்ஸ் அணி 1 - 0 என்ற கணக்கில் நூலிழையில் வெற்றி பெற்று, காலிறுதி வாய்ப்பையும் உறுதி செய்தது. 

பராகுவே அணி போராடி தோல்வியடைந்து போட்டியில் இருந்து வெளியேறியது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset