செய்திகள் விளையாட்டு
உலகக் கிண்ண காலிறுதி சுற்றில் மொராக்கோ: வெளியேறியது கனடா
ஹூஸ்டன்:
உலகக் கிண்ண கால்பந்துப் போட்டியின் காலிறுதி சுற்றுக்கு மொராக்கோ அணி முன்னேறியது.
அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் நடந்த உலகக் கிண்ண கால்பந்து போட்டியின் சுற்று 16 ஆட்டத்தில் கனடா, மொராக்கோ அணிகள் மோதின.
ஆட்டத்தின் 39ஆவது நிமிடத்தில் மொராக்கோவின் அஷ்ரப் ஹகிமி, கனடாவின் ரிச்சி லாரியாவை தள்ளிவிட்டதால், இரு அணியினருக்கு இடையே வார்த்தை மோதல் ஏற்பட்டது. அப்போது நடுவர் குறுக்கிட்டு வீரர்களை சமாதானப்படுத்தினார். ஹகிமிக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது.
முதல் பாதி கோல் எதுவுமின்றி சமநிலையில் இருந்தது.
பிற்பாதியில் எழுச்சி கண்ட மொராக்கோ அணிக்கு 50ஆவது நிமிடத்தில் அஷ்ரப் ஹகிமி பாஸ் செய்த பந்தில் அசெடின் ஓனாஹி ஒரு கோல் அடித்தார்.
தொடர்ந்து அசத்திய அசெடின் ஓனாஹி, 82ஆவது நிமிடத்தில் மீண்டும் கோல் அடித்தார்.
இதற்கு, கனடா அணியினரால் பதிலடி கொடுக்க முடியவில்லை.
ஆட்ட நேர முடிவில் மொராக்கோ அணி 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று, தொடர்ந்து 2ஆவது முறையாக (2022, 2026) காலிறுதிக்குள் நுழைந்தது.
கடந்த முறை மொராக்கோ அணி 4வது இடம் பிடித்திருந்தது.
முதல் முறையாக நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறிய கனடா அணி ஏமாற்றத்துடன் வெளியேறியது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 5, 2026, 10:02 am
உலகக் கிண்ணம்: எம்பாப்பே கோலால் காலிறுதிக்கு முன்னேறியது பிரான்ஸ்
July 4, 2026, 2:17 pm
உலகக் கிண்ணம்: கானாவை வீழ்த்திய கொலம்பியா
July 4, 2026, 10:31 am
கனடா ஓபனில் அபார வெற்றி: அரையிறுதிக்குள் அதிரடியாக நுழைந்தார் லீ ஜீ ஜியா
July 4, 2026, 9:53 am
உலகக் கிண்ணம்: பெனால்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது எகிப்து
July 4, 2026, 9:52 am
உலகக் கிண்ணம்: கேப் வெர்டே அணியை வீழ்த்தி நூலிழையில் பிழைத்த அர்ஜெண்டினா
July 3, 2026, 1:46 pm
உலகக் கிண்ண கால்பந்து போட்டி: குரோஷியாவை வீழ்த்தி சுற்று 16க்கு முன்னேறிய போர்த்துகல்
July 3, 2026, 8:28 am
உலகக் கிண்ண கால்பந்து போட்டி: ஆஸ்திரியாவை விழ்த்தியது ஸ்பெயின்
July 2, 2026, 11:22 am
