செய்திகள் மலேசியா
'பண்ட் ஷாங்காய்' குடியிருப்புக்கு DBKL கடும் நடவடிக்கை: உத்தரவை மீறிய JMB-க்கு நோட்டீஸ்
கோலாலம்பூர்:
புக்கிட் பிந்தாங்கில் அமைந்துள்ள பிளாட் ஹிக்ஸ் (Flat Hicks) குடியிருப்பின் கூட்டு மேலாண்மை அமைப்பு (JMB), சுகாதார, தூய்மை தொடர்பாக முன்னர் வழங்கப்பட்ட உத்தரவுகளைத் தொடர்ந்து பின்பற்றத் தவறியதால், கோலாலம்பூர் மாநகராட்சி (DBKL) நோட்டீஸ் வழங்கி, இரண்டு அபராதங்களை விதித்துள்ளது.
செவ்வாய்க்கிழமை கோலாலம்பூர் மேயர் மேற்கொண்ட திடீர் ஆய்வைத் தொடர்ந்து, இன்று நடைபெற்ற மறுஆய்வின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக DBKL வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆய்வில், Flat Hicks JMB, DBKL முன்பு வழங்கிய சுத்தம், பராமரிப்பு தொடர்பான உத்தரவுகளை இன்னும் முழுமையாக நிறைவேற்றவில்லை என்பது உறுதி செய்யப்பட்டதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையடுத்து, 1976-ஆம் ஆண்டு உள்ளூராட்சி சட்டத்தின் பிரிவு 82-ன் கீழ் உடனடி சீரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு 'இடையூறு ஏற்படுத்தும் நிலை' (Nuisance Notice) குறித்த அதிகாரப்பூர்வ நோட்டீஸ் வழங்கப்பட்டது.
அத்துடன், 1974-ஆம் ஆண்டு சாலைகள், வடிகால், கட்டிடங்கள் சட்டத்தின் பிரிவு 47(1)(a)-ன் கீழ் ஒரு அபராதமும், 1976-ஆம் ஆண்டு உள்ளூராட்சி சட்டத்தின் பிரிவு 82(5)-ன் கீழ் மற்றொரு அபராதமும், சுத்தம் தொடர்பான உத்தரவுகளை மீறியதற்காக விதிக்கப்பட்டுள்ளதாக DBKL தெரிவித்துள்ளது.
இதனுடன், அப்பகுதியின் சுகாதாரத் தரத்தை உறுதி செய்து, பொதுமக்களின் நலனைப் பாதுகாக்கும் நோக்கில் DBKL தனது பணியாளர்கள் மூலம் சுத்தப்படுத்தும் பணிகளையும் மேற்கொண்டுள்ளது.
"பொறுப்புக்கூற வேண்டிய தரப்பினரின் செயல்பாடுகளை DBKL தொடர்ந்து கண்காணிக்கும். வழங்கப்பட்ட உத்தரவுகள் மீண்டும் புறக்கணிக்கப்பட்டால், மேலும் கடுமையான சட்ட அமலாக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும்," என்று அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
முன்னதாக, 'பண்ட் ஷாங்காய்' என்ற பெயரில் பரவலாக அறியப்படும் Flat Hicks குடியிருப்பு, ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த யூடியூப் உள்ளடக்க உருவாக்குநர் ஒருவர் வெளியிட்ட காணொலியைத் தொடர்ந்து மீண்டும் சர்ச்சைக்குரியதாக மாறியது. அந்தக் காணொலியில், குடியிருப்பின் அழுக்கான, சீர்குலைந்த, துர்நாற்றம் வீசும் சூழல் வெளிப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, சமூக வலைதளங்களில் பரவலான விவாதம் எழுந்தது.
அந்தக் காணொலி வைரலானதைத் தொடர்ந்து, கடந்த செவ்வாய்க்கிழமை DBKL அங்கு விரிவான சுத்தப்படுத்தும் பணிகளை மேற்கொண்டதுடன், இந்தக் குடியிருப்பில் ஏற்கனவே பல கட்ட அமலாக்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்ததாகவும் தெரிவித்துள்ளது.
- சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
July 3, 2026, 4:47 pm
கெமெலே சட்டமன்றத் தொகுதியை தேசிய முன்னணி மீண்டும் கைப்பற்றும்: ரவீன்குமார்
July 3, 2026, 4:36 pm
ஜொகூர் தேர்தல்: பழைய விவகாரங்களை துடைத்தொழித்து முதிர்ச்சியான அரசியலை முன்னெடுங்கள்
July 3, 2026, 4:10 pm
சட்ட மீறல்களுக்குப் பூஜ்ஜிய சகிப்புத்தன்மை: தவறான நடத்தைக்கு சிறைத்துறை கடும் எச்சரிக்கை
July 3, 2026, 4:00 pm
