நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கெமெலே சட்டமன்றத் தொகுதியை தேசிய முன்னணி மீண்டும் கைப்பற்றும்: ரவீன்குமார்

ஜொகூர்பாரு:

ஜொகூரில் கெமெலே சட்டமன்றத் தொகுதியை தேசிய முன்னணி மீண்டும் கைப்பற்றும்.

அத்தொகுதி வேட்பாளரும் மாநில மஇகா தொடர்புக் குழு தலைவருமான ரவீன்குமார் கிருஷ்ணசாமி இந்த நம்பிக்கையை தெரிவித்தார்.


ஜொகூர் மாநில சட்டமன்ற தேர்தல் வரும் ஜூலை 11ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இத்தேர்தலை முன்னிட்டு தற்போது அனல் பறக்கும் பிரச்சாரங்கள் நடைபெற்று வருகின்றன.

இதில் கெமெலே சட்டமன்றத் தொகுதியில் தேசிய முன்னணி சார்பில் நான் போட்டியிடுகிறேன்.

கடந்த ஒரு வாரக் காலமாக இத்தொகுதியில் மக்களை சந்தித்து வாக்குகளை சேகரித்து வருகிறேன்.

இத்தொகுதியில் முதல் முறையாக போட்டியிட்டாலும் மக்கள் மகத்தான ஆதரவை வழங்குகின்றனர்.

அதே வேளையில் ஜொகூரில் தேசிய முன்னணி அரசாங்கத்தின் ஆட்சியில் இத்தொகுதி மக்களின் தேவைகள் உடனடியாக பூர்த்தி செய்யப்படுகிறது.

இதனால் இத்தொகுதி மக்கள் தேசிய முன்னணிக்கு முழு ஆதரவை வழங்கி வருகின்றனர்.

இந்த ஆதரவின் அடிப்படையில் கெமெலே சட்டமன்றத் தொகுதியில் தேசிய முன்னணி உறுதியாக வெற்றி பெரும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது என்று ரவீன்குமார் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset