நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஜொகூர், சிங்கப்பூர் சிறப்பு பொருளாதார மண்டல விவகாரத்தைத் தேர்தல் பிரச்சாரமாக பயன்படுத்தக் கூடாது: டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கருத்து 

கோலாலம்பூர்- 

ஜொகூர் மாநில தேசிய முன்னணி தலைவரும் மாநில பராமரிப்பு அரசாங்கத்தின் மந்திரி பெசாருமான ஓன் ஹாஃபிஸ் காஸி, சிங்கப்பூர், ஜொகூர் சிறப்பு பொருளாதார மண்டலத்தை தேர்தல் பிரச்சாரமாக பயன்படுத்த கூடாது என்று பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கேட்டுக்கொண்டார். 

இந்தத் திட்டம் மாநில அரசுடன் இணைந்து செயல்படுத்தப்படும் ஒரு மத்திய அரசு முயற்சி என்று அன்வார் கூறினார். மேலும், "ஒப்பந்தம் கையெழுத்திடப்படுவது மலேசிய மற்றும் சிங்கப்பூர் பிரதமர்களுக்கு இடையே ஆகும். இது இன்னும் மாநில மந்திரி பெசாரின்  நிலையை எட்டவில்லை" என்றும் அவர் குறிப்பிட்டார்.

"இதை ஒரு பிரச்சினையாக்க வேண்டாம். இத்திட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது, அதிக செலவினங்களைக் கொண்டுள்ளது.

மேலும் மத்திய அரசிடமிருந்து உதவிகளையும் பெற்று வருகிறது. அவர் இத்திட்டத்திற்கு இதுவரை தனது நன்றியைத் தெரிவிக்கவில்லை, மாறாக இப்போது இந்த விவகாரத்தைப் பயன்படுத்தி விமர்சிக்கிறார் என்று அன்வார் தெரிவித்தார். 

முன்னதாக நேற்று, ஜொகூர்-சிங்கப்பூர் எல்லை கடந்த பொருளாதார முயற்சியின் முதன்மைத் திட்டத்தை (master plan) தொடங்குவதை மத்திய அரசு மீண்டும் மீண்டும் தாமதப்படுத்துவதாக ஆன் ஹஃபீஸ் குற்றம் சாட்டியிருந்தார்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset