நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஜொகூர் தேர்தல்: பழைய விவகாரங்களை துடைத்தொழித்து முதிர்ச்சியான அரசியலை முன்னெடுங்கள் 

ஜொகூர் பாரு- 

ஜொகூர் மாநில சட்டமன்ற தேர்தலின் போது  பழைய மற்றும் தேவையற்ற அரசியல் சர்ச்சைகளைக் கிளப்புவதை அனைத்து தரப்பினரும் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று துணைப்பிரதமரும் தேசிய முன்னணி தலைவருமான டத்தோஶ்ரீ அஹ்மத் ஸாஹித் ஹமிடி கூறினார். 

இந்தத் தேர்தல் போட்டி முதிர்ச்சியுடனும் கண்ணியத்துடனும் நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

கூட்டாட்சி அரசாங்க அளவில் அனைத்துக் கட்சிகளும் இணைந்து செயல்படுவதால், தற்போதைய பிரச்சாரங்கள் வேட்பாளர்களின் பலம் மற்றும் மக்களுக்கு வழங்கப்படும் வாக்குறுதிகள் மீதே கவனம் செலுத்த வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.

குறிப்பிட்ட சிலர் இன்னும் அம்னோ (UMNO) மற்றும் பாரிசான் நேஷனலுக்கு எதிராகப் பழைய விவகாரங்களை முன்வைத்துத் தாக்கிப் பேசி வருவதைச் சுட்டிக்காட்டிய ஜாஹித் ஹமிடி, மத்திய அரசு மட்டத்தில் நாம் அனைவரும் கூட்டாளிகளாக இருப்பதால் அந்தப் பழையப் பிரச்சினைகளைப் பேச வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார்.

நாம் வாரந்தோறும் அமைச்சரவைக் கூட்டங்களில் சந்தித்துக் கொள்கிறோம். எனவே, ஜொகூர் தேர்தல் களத்தை விவேகத்துடனும் சிறந்த முறையிலும் எதிர்கொள்ள வேண்டும் என்றும், அமைச்சரவை சகாகக்களைச் சந்திக்கும் போது அவர்களுக்கு எந்தவொரு சங்கடமான சூழ்நிலையும் ஏற்படக்கூடாது என்றும் கெம்பாஸ் சட்டமன்றத் தொகுதியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்குப் பிறகு அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.

 கடந்த தேர்தலில் 40 இடங்களை வென்ற BN, இம்முறை ஜொகூர் மாநிலத்தின் அனைத்து 56 சட்டமன்றத் தொகுதிகளிலும் வேட்பாளர்களைக் களம் இறக்கியுள்ளது. இந்த ஜொகூர் மாநிலத் தேர்தல் வரும் ஜூலை 11-ஆம் தேதி நடைபெறவுள்ள வேளையில், அதற்கான முன்கூட்டிய வாக்குப்பதிவு ஜூலை 7-ஆம் தேதி நடைபெறவிருப்பது குறிப்பிடத்தக்கது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset