செய்திகள் மலேசியா
மூன்றாவது உலக சாதனையைப் படைத்தார் தடகள வீரர் டாக்டர் கே. ஜெய் பிரபாகரன் தேவர்: வெற்றியானது மறைந்த தந்தைக்கு அர்ப்பணித்தார்
கோலாலம்பூர்-
‘டாக்டர் கேஜே’ என்று அழைக்கப்படும் உடற்பயிற்சி தடகள வீரர் கே. ஜெய் பிரபாகரன் தேவர், 18 மணி நேர இடைவிடாத கார்டியோ மற்றும் பழுது தூக்கும் போட்டியில் தனது மூன்றாவது உலக சாதனையைப் படைத்து, அதனைத் தனது மறைந்த தந்தைக்கு அர்ப்பணித்துள்ளார்.
29 வயதான இந்த தடகள வீரர், கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்த சாதனை மூலம் ‘மலேசியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்’ (MBOR) மற்றும் ‘இன்புளுயன்சர் புக் ஆஃப் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ்’ ஆகியவற்றில் தனது பெயரைப் பதிவு செய்துள்ளார்.
பகாங், கோலா லிப்பிஸில் உள்ள ஹெல்த்லேண்ட் மையத்தில் அதிகாலை 4 மணிக்குத் தொடங்கிய இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க சாதனை முயற்சி இரவு 11 மணிக்கு நிறைவடைந்தது.
கடந்த 1999 ஆம் ஆண்டு மார்ச் 3 ஆம் தேதி மறைந்த தனது தந்தை குணசீகரன் சுப்பையா தேவரின் இழப்பு, தமக்கு தந்தை பாசம் கிடைக்காமல் போனாலும், உலக அரங்கில் நாட்டிற்குப் பெருமை சேர்க்கும் வகையில் தொடர்ந்து போராடுவதற்கான உந்துதலாகவும் பலமாகவும் அமைந்தது என்று ஜெய் பிரபாகரன் கூறினார்.
டாக்டர் கே.ஜே இதற்கு முன்பு 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் 12 மணி நேர மற்றும் 15 மணி நேர இடைவிடாத கார்டியோ மற்றும் பழுது தூக்கும் சவால்கள் மூலம் MBOR மற்றும் கின்னஸ் உலக சாதனைகளைப் (GWR) படைத்ததோடு, 13 மணி நேர ஆசிய சாதனையையும் முறியடித்துள்ளார்.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தேசிய விளையாட்டு தினத்தை முன்னிட்டு தேசிய சாதனை சவாலை முடித்த உடனேயே, இந்த புதிய உலக சாதனைக்கான தயாரிப்புகளைத் தொடங்கிவிட்டதாகக் கோலா லிப்பிஸைப் பூர்வீகமாகக் கொண்ட அவர் தெரிவித்தார்.
இந்த சவாலுக்காகத் தனது உணவு முறையை முழுமையாக சைவ உணவாக மாற்றி 32 கிலோ எடையைக் குறைத்ததாகவும், சாதனை முயற்சியின் போது சோர்வு மற்றும் தூக்கக் கலக்கத்தை முறியடிக்கப் போராடியதாகவும், மேலும் இளைஞர்கள் ஆரோக்கியமான வாழ்க்கை முறையைக் கடைப்பிடிக்கத் தூண்டுகோலாக இருக்க விரும்புவதோடு, வரும் அக்டோபரில் 5 மணி நேரத்தில் 5,000 ‘ஜம்பிங் ஜாக்ஸ்’ செய்யும் அடுத்த தேசிய சாதனைக்கும் திட்டமிட்டுள்ளதாக மலேசிய இந்திய உடற்பயிற்சி சங்கத்தின் தலைவருமான டாக்டர் கேஜே குறிப்பிட்டார்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
July 3, 2026, 4:47 pm
கெமெலே சட்டமன்றத் தொகுதியை தேசிய முன்னணி மீண்டும் கைப்பற்றும்: ரவீன்குமார்
July 3, 2026, 4:36 pm
ஜொகூர் தேர்தல்: பழைய விவகாரங்களை துடைத்தொழித்து முதிர்ச்சியான அரசியலை முன்னெடுங்கள்
July 3, 2026, 4:10 pm
சட்ட மீறல்களுக்குப் பூஜ்ஜிய சகிப்புத்தன்மை: தவறான நடத்தைக்கு சிறைத்துறை கடும் எச்சரிக்கை
July 3, 2026, 4:00 pm
