செய்திகள் மலேசியா
டாக்சி ஓட்டுநர்களின் மேம்பாடு, வளர்ச்சிக்காக கூடுதலாக 10 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு: பிரதமர் அறிவிப்பு
கோலாலம்பூர்:
டாக்சி ஓட்டுநர்களின் மேம்பாடு, வளர்ச்சிக்காக கூடுதலாக 10 மில்லியன் ரிங்கிட் அரசாங்கம் ஒதுக்கீடு செய்கிறது.
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இதனை அறிவித்தார்.
டாக்சி ஓட்டுநர்களுக்காக முன்னதாக அறிமுகப்படுத்தப்பட்ட இதேபோன்ற திட்டத்திற்கு கிடைத்த ஊக்கமளிக்கும் வரவேற்பைத் தொடர்ந்து,
மேலும் பல டாக்சி ஓட்டுநர்கள் புதிய வாகனங்களை இந்த கூடுதல் மானியம் ஒதுக்கப்படுகிறது.
2026 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் அறிக்கையில் அறிவிக்கப்பட்ட 10 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு, முன்னர் சுமார் மூன்று மாதங்களில் தீர்ந்துவிட்டது.
இது ஓட்டுநர்கள் தங்கள் பழைய வாகனங்களை புதிய மாடல்களுக்கு மாற்றிக்கொள்ள அதிக ஆர்வம் காட்டுவதை இது நிரூபிக்கிறது.
நல்ல வரவேற்பு கிடைத்ததன் காரணமாக, இன்று நான் கூடுதலாக 10 மில்லியன் ரிங்கிட் ஒப்புதல் அளித்துள்ளேன்.
இது குறிப்பாக டாக்சிகளுக்காகவ ஒதுக்கப்பட்டுள்ளது.
இன்று இங்குள்ள டத்தாரான் மெர்டேக்காவில் தேசிய மடானி டாக்சி உருமாற்ற திட்டத்தைத் தொடங்கி வைத்து அவர் இவ்வாறு பேசினார்.
டாக்சி உரிமங்கள் மூன்றாம் தரப்பினருக்குச் சொந்தமாக இல்லாமல், ஓட்டுநர்களுக்கே சொந்தமாக இருக்க வேண்டும் என்ற கொள்கையில் அரசாங்கம் உறுதியாக உள்ளது.
இதன் மூலம் நாட்டின் டாக்சி தொழில் சீர்திருத்த முயற்சிகளிலிருந்து இந்தத் தரப்பினர் நேரடியாகப் பயனடைவதை உறுதி செய்வதாக டத்தோஸ்ரீ அன்வார் கூறினார்.
மேலும், ஓட்டுநர்கள் மீதான சுமையைக் குறைக்கும் வகையில், நிதி உதவி, பராமரிப்பு மற்றும் விற்பனைக்குப் பிந்தைய சேவைச் செலவுகளைக் குறைப்பது உள்ளிட்ட மலிவு விலையிலான உரிமத் தொகுப்புகளை வழங்குவதற்காக, புரோட்டான், நிதி நிறுவனங்கள், சம்பந்தப்பட்ட அமைச்சகங்களுடன் அரசாங்கம் இணைந்து செயல்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 3, 2026, 4:47 pm
கெமெலே சட்டமன்றத் தொகுதியை தேசிய முன்னணி மீண்டும் கைப்பற்றும்: ரவீன்குமார்
July 3, 2026, 4:36 pm
ஜொகூர் தேர்தல்: பழைய விவகாரங்களை துடைத்தொழித்து முதிர்ச்சியான அரசியலை முன்னெடுங்கள்
July 3, 2026, 4:10 pm
சட்ட மீறல்களுக்குப் பூஜ்ஜிய சகிப்புத்தன்மை: தவறான நடத்தைக்கு சிறைத்துறை கடும் எச்சரிக்கை
July 3, 2026, 4:00 pm
