செய்திகள் மலேசியா
தேசிய மடானி டாக்சி உருமாற்ற திட்டத்தின் கீழ் டாக்சிகளின் உரிமை இனி ஓட்டுநரிடமே இருக்கும்: அந்தோனி லோக்
கோலாலம்பூர் -
நாட்டில் இனி ஓட்டுநர்கள் தங்களது டாக்சிகளை சொந்தமாக்கி கொளவார்கள் என்று போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக் கூறினார்.
தேசிய மடானி டாக்சி உருமாற்ற திட்டம் ஒரு புதிய உரிமை முறையை அமைச்சு இன்று அறிமுகப்படுத்துகிறது .
இதில் டாக்சியின் உரிமையானது முன்பு போல குத்தகைத் திட்டத்தின் மூலம் இல்லாமல், ஓட்டுநரிடமே நீடிக்கிறது.
இந்தத் திட்டத்தின் மூலம், டாக்சி ஓட்டுநர்கள் எளிதான நிதித் திட்டங்கள், புதிய வாகனத்தை வாங்குவதற்கான செலவைக் குறைக்கும் அரசாங்க ஆதரவுடன் புரோட்டான் எஸ் 70-க்கு மாறலாம்.
எந்தவொரு நிதித் திட்டத்திலும் வாகனத்தின் உரிமையானது
ஓட்டுநரிடமே இருக்க வேண்டும் என்ற நிபந்தனைக்கு நிதியமைச்சு ஒப்புதல் அளித்துள்ளது.
டாக்சி துறையின் மாற்றத்தில் இது ஒரு முக்கிய அம்சம்.
ஏனெனில் ஓட்டுநர்கள் வாகனத்தை ஓட்டுவதோடு மட்டுமல்லாமல், தங்களது டாக்சிகளின் சட்டப்பூர்வ உரிமையாளர்களாகவும் ஆகிறார்கள்.
இது ஒரு மிக முக்கியமான அம்சம், ஏனென்றால் ஒரு நிதி நிறுவனத்துடன் நிதியுதவி இருந்தாலும், இது ஒரு குத்தகை அல்ல.
வாகனத்தின் உரிமை ஓட்டுநரிடமே இருக்கும்.
எனவே, இது ஒரு பழைய திட்டமோ அல்லது டாக்சியைக் குத்தகைக்கு எடுக்கும் பழைய முறையோ அல்ல.
வாகனத்தின் உரிமையாளர் அல்லது ஓட்டுநரே அதன் சட்டப்பூர்வ உரிமையாளர்.
இன்று டத்தாரான் மெர்டேக்காவில் நடைபெற்ற தேசிய மடானி டாக்சி உருமாற்ற திட்டத்தின் தொடக்க விழாவில் பேசும்போது அவர் இவ்வாறு கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 3, 2026, 4:47 pm
கெமெலே சட்டமன்றத் தொகுதியை தேசிய முன்னணி மீண்டும் கைப்பற்றும்: ரவீன்குமார்
July 3, 2026, 4:36 pm
ஜொகூர் தேர்தல்: பழைய விவகாரங்களை துடைத்தொழித்து முதிர்ச்சியான அரசியலை முன்னெடுங்கள்
July 3, 2026, 4:10 pm
சட்ட மீறல்களுக்குப் பூஜ்ஜிய சகிப்புத்தன்மை: தவறான நடத்தைக்கு சிறைத்துறை கடும் எச்சரிக்கை
July 3, 2026, 4:00 pm
