நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஜொகூரில் தேசிய முன்னணியின் மாபெரும் வெற்றி, நஜிப் மன்னிக்கப்பட வேண்டும் என்று மக்கள் விரும்புவதற்கான ஒரு சமிக்ஞையாகும்: நஜிபுடின்

குளுவாங்:

ஜொகூரில் தேசிய முன்னணியின் மாபெரும் வெற்றி, நஜிப் மன்னிக்கப்பட வேண்டும் என்று மக்கள் விரும்புவதற்கான ஒரு சமிக்ஞையாகும்.

லங்காவி அம்னோ தலைவரும் டத்தோஸ்ரீ நஜிப்பின் மகனுமான நஜிபுடின் இதனை கூறினார்.

ஜொகூர் மாநிலத் தேர்தலில் தேசிய முன்னணி மாபெரும் வெற்றி பெறும்.

இந்த வெற்றியானது மக்கள் முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் ரசாக்கிற்கு தொடர்ந்து ஆதரவளிப்பதையும், அவர் அரச மன்னிப்பைப் பெறுவார் என்று நம்புவதையும் உணர்த்தும்.

மேலும் ஜொகூரில் தேசிய முன்னணியின் மாபெரும் வெற்றி நஜிப்பின் விடுதலைக்கு வழிவகுக்கும்.

தேசிய முன்னணி மாபெரும் வெற்றி பெற்றால், அது ஜொகூர் மக்கள் தேசிய முன்னணி, மாநிலத் தலைமைக்கு ஆதரவளிப்பது மட்டுமல்லாமல்,

அவர்கள் இன்னும் 'போஸ்கு'வை நேசிக்கிறார்கள் என்பதற்கும், அவர் மீண்டும் மக்களுடன் இருக்க முடியும் என்று நம்புகிறார்கள் என்பதற்கும் ஒரு சமிக்ஞையாக இருக்கும் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset