நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

5 கிலோ எடை கொண்ட தங்கத்தினாலான FIFA உலகக் கோப்பையின் தற்போதைய மதிப்பு தெரியுமா?

டல்லாஸ்:

சுமார் 5 கிலோ எடை கொண்ட தங்கத்தினாலான ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து தொடரில் வெற்றியாளருக்கு வழங்கப்படும் கோப்பையின் தற்போதைய மதிப்பு என்ன தெரியுமா?

கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜெண்டினா அணி உலகக் கோப்பை பட்டம் வென்றது. அப்போது இந்த 5 கிலோ கோப்பையின் மதிப்பு $440 million டாலர்கள் ஆகும்.

கடந்த 1974-ல் நடைபெற்ற உலகக் கோப்பை தொடருக்காக தற்போது பயன்பாட்டில் உள்ள கோப்பையை இத்தாலி நாட்டை சேர்ந்த சிற்பி சில்வியோ கஸானிகா இதை வடிவமைத்தார். சுமார் 36.5 சென்டிமீட்டர் உயரம் கொண்ட இந்த கோப்பை 18 காரட் தங்கத்தை கொண்டு பயன்படுத்தப்பட்டது. இதன் மொத்த எடை 6.175 கிலோகிராம். இதில் சுத்த தங்கத்தின் எடை 4.93 கிலோகிராம். 

இந்த கோப்பை ஃபிபாவின் தலைமையகம் அமைந்துள்ள சூரிச் நகரில் பாதுகாப்பு பெட்டகத்தில் வைக்கப்பட்டுள்ளது. உலகக் கோப்பை தொடரின் முக்கிய நிகழ்வுகளுக்கு மட்டுமே இது கொண்டு வரப்படும். வெற்றியாளர் இந்த கோப்பையை தங்கள் வசம் தொடர்ந்து வைத்துக் கொள்ள முடியாது.

2026 FIFA உலகக் கோப்பை பிராண்டின் அதிகாரப்பூர்வ மதிப்பு சுமார் 5.2 பில்லியன் டாலர்கள் ஆகும்.

வெற்றியாளருக்கு தங்க முலாம் பூசப்பட்ட மாதிரி கோப்பையைதான் ஃபிபா வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. 

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset