நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

உலகக் கிண்ண கால்பந்து போட்டி: சுவீடனை வீழ்த்தியது பிரான்ஸ்

ஆர்லிங்டன்:

உலகக் கிண்ண கால்பந்து போட்டியில் சுவீடனுக்கு எதிரான போட்டியில் பிரான்ஸ் அணி வெற்றி பெற்றது.

இதில், அதிகாலையில் நடந்த 2ஆவது சுற்று ஆட்டம் ஒன்றில் பிரான்ஸ், சுவீடன் அணிகள் விளையாடின. 

அமெரிக்காவின் நியூஜெர்சி மைதானத்தில் நடந்த இந்த போட்டியின் 45ஆவது நிமிடத்தில் பிரான்ஸ் அணி வீரர் கிளையன் எம்பாப்பே முதல் கோலை போட்டார்.

அதன்பின்னர், கோல் அடிக்கப்படவில்லை. 

இதனால், சுவீடனுக்கு எதிரான போட்டியின் முதல் பாதியில் 0-1 என பிரான்ஸ் முன்னிலை பெற்றது.

இதன்பின்னர் பிற்பாதியில் 53ஆவது நிமிடத்தில் பிராட்லி பார்கோலா 2ஆவது கோலை போட்டார். 

ஆட்டத்தின் 74ஆவது நிமிடத்தில் எம்பாப்பே மற்றொரு கோலை போட்டார். இந்த தொடரில் அவருடைய 10ஆவது கோல் இதுவாகும். இதனால், வெற்றி உறுதியானது.

அதன்பின்னர் இருதரப்பிலும் கோல் அடிக்கப்படவில்லை. போட்டி நேர முடிவில் 3-0 என்ற கணக்கில் பிரான்ஸ் அணி வெற்றி பெற்றது. 

சுவீடன் தொடரில் இருந்து வெளியேறியது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset