செய்திகள் விளையாட்டு
உலகக் கிண்ண கால்பந்து போட்டியின் சுற்று 16க்கு நார்வே முன்னேறியது
ஆர்லிங்டன்:
உலகக் கிண்ண கால்பந்து போட்டியின் சுற்று 16க்கு நார்வே அணியினர் முன்னேறினர்.
சுற்று 32 ஆட்டம் ஒன்றில் ஐவரிகோஸ்ட்_ நார்வே அணிகள் விளையாடின.
அமெரிக்காவின் ஆர்லிங்டன் நகரில் உள்ள டல்லாஸ் அரங்கில் நடந்த இந்த போட்டியின் 39ஆவது நிமிடத்தில் நார்வே அணி வீரர் ஆன்டனியோ நூசா முதல் கோல் அடித்து ஆட்டத்தில் விறுவிறுப்பை கூட்டினார்.
அதன் பின்னர், கோல் அடிக்கப்படவில்லை. இதனால், ஆட்டத்தின் முதல் பாதி முடிவில் 1-0 என்ற புள்ளி கணக்கில் நார்வே அணி முன்னிலையில் இருந்தது.
பிற்பாதியில் ஐவரிகோஸ்ட் அணியின் அமத் டையல்லோ 74ஆவது நிமிடத்தில் ஒரு கோல் போட்டார்.
இதன்பின்னர் 86ஆவது நிமிடத்தில் நார்வேவின் எர்லிங் ஹாலந்து ஒரு கோல் போட்டார்.
இதனால், 1-2 என்ற கணக்கில் நார்வே அணி முன்னிலை பெற்றது.
இதன்பின்னர் கோல் போடப்படவில்லை. கூடுதல் நேரத்திலும் கோல் அடிக்கப்படவில்லை.
போட்டியின் முடிவில், 1-2 என்ற கணக்கில் நார்வே அணி வெற்றி பெற்றது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 1, 2026, 2:00 pm
தென்கொரியக் கால்பந்து அணி வீரர்களுக்கு எதிராக விமான நிலையத்தில் எதிர்ப்பு முழக்கங்கள்
July 1, 2026, 8:06 am
உலகக் கிண்ண கால்பந்து போட்டி: சுவீடனை வீழ்த்தியது பிரான்ஸ்
June 30, 2026, 3:45 pm
5 கிலோ எடை கொண்ட தங்கத்தினாலான FIFA உலகக் கோப்பையின் தற்போதைய மதிப்பு தெரியுமா?
June 30, 2026, 3:01 pm
தோல்வியின் கண்ணீரிலும் கடமை தவறாத ஜப்பான் - மைதானத்தை சுத்தம் செய்து உலகை வென்ற ரசிகர்கள்
June 30, 2026, 12:44 pm
உலகக் கிண்ண கால்பந்து போட்டி: மொராக்கோ முன்னேற்றம், நெதர்லாந்து ஏமாற்றம்
June 30, 2026, 9:19 am
உலகக் கிண்ண கால்பந்து போட்டி: பிரேசில் திரில் வெற்றி
June 30, 2026, 9:18 am
உலகக் கிண்ண கால்பந்து போட்டியிலுருந்து ஜெர்மனியை வெளியேற்றியது பராகுவே
June 29, 2026, 9:59 am
200 கோல்கள்: உலகக் கிண்ண கால்பந்து போட்டியில் புதிய சாதனை
June 29, 2026, 9:58 am
