நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நீலாய் பண்டார் என்ஸ்டெக் பகுதியில் புதிய மருத்துவமனை நிர்மாணிக்கப்படும்- டாக்டர் சூல்கிஃப்ளி அஹ்மத் தகவல் 

கோலாலம்பூர்- 

நெகிரி செம்பிலான் மாநிலத்தின் நீலாய், பண்டார் என்ஸ்டெக் பகுதியில் புதிய மருத்துவமனை ஒன்று நிர்மாணிக்கப்படும் என்று நாட்டின் சுகாதார அமைச்சர் டத்தோஶ்ரீ டாக்டர் சூல்கிஃப்ளி அஹ்மத் கூறினார். 

துவாங்கு ஜஃபார் மருத்துவமனையின் கூட்டத்தைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையின் ஓர் அங்கமாக இந்த நிர்மாணிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் குறிப்பிட்டார். 

வட சிரம்பான் காரிடர் பகுதியில் புதிய மருத்துவமனை ஒன்று கட்டுவது என்பது அங்குள்ள மற்றும் சுற்றுவட்டார பகுதிகள் பெரும் மேம்பாடு காணும் என்று அவர் விளக்கமளித்தார். 

கடந்த ஜூன் 16ஆம் தேதி  புதிய மருத்துவமனை நிர்மாணிப்பு தொடர்பாக மாநில மந்திரி பெசார் டத்தோஶ்ரீ அமினுடின் ஹருன் அவர்களுடன் கலந்துரையாடப்பட்டது. 

இந்த கலந்துரையாடலின் வழி நீலாயில் புதிய மருத்துவமனை நிர்மாணிக்க இணக்கம் பெறப்பட்டது என்று அவர் சொன்னார். நிர்மாணிப்பு பணிகளுக்காக மாநில அரசாங்கம் சுமார் 50 ஏக்கர் நிலப்பரப்பினை கண்டறிந்துள்ளதாகவும் அவர் கூறினார்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset