நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அனைவருக்குமான ஜொகூர் எனும் தேர்தல் வாக்குறுதியை இன்று நம்பிக்கை கூட்டணி அறிவிக்கவுள்ளது

ஜொகூர் பாரு - 

ஜொகூர் மாநில சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் ஆளும் நம்பிக்கை கூட்டணி அரசியல் கூட்டணி தங்களின் தேர்தல் வாக்குறுதிகளை இன்று வெள்ளிக்கிழமை வெளியிடுகிறது. 

அவ்வகையில், JOHOR UNTUK SEMUA அல்லது அனைவருக்குமான ஜொகூர் என்ற பெயரில் இந்த தேர்தல் வாக்குறுதிகள் இன்று அறிவிக்கப்படவுள்ளதாக நம்பிக்கை கூட்டணி அறிவித்துள்ளது. 

நம்பிக்கை கூட்டணியின் தேர்தல் வாக்குறுதிகளை நம்பிக்கை கூட்டணியின் தலைவர் மன்றத்தின் உறுப்பினர் டத்தோஶ்ரீ அமிருடின் ஷாரி அவர்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்த நிகழ்ச்சியில் ஜொகூர் மாநில நம்பிக்கை கூட்டணி தலைவர் அமினொல்ஹுடா ஹசான், மாநில ஜசெக தலைவர் தியோ நீ சிங், பிகேஆர் தலைவர் டத்தோஶ்ரீ டாக்டர் ஸலெஹா முஸ்தஃபா ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர். 

ஜொகூர் மாநிலத்தில் மொத்தம் 56 சட்டமன்ற இடங்கள் உள்ளன. நம்பிக்கை கூட்டணி அனைத்து 56 சட்டமன்ற இடங்களிலும் போட்டியிடுகின்றது. 

ஜொகூர் மாநில சட்டமன்ற தேர்தல் எதிர்வரும் ஜூலை 11ஆம் தேதியும் முன்கூட்டியே வாக்களிப்பு ஜூலை 7ஆம் தேதியும் நடைபெறவுள்ளது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset